Sunday, March 25, 2007

பகலில் நிலாச் சோறு

நின் அகலின் தழல் சோறு
தனிமை இருளின் பசியகற்றும்
அன்பீந்த புறங்கை என் இதழ் முயங்கும்
குழலாகும்
குழல் விரிந்த நின் கேசம்
நான் திரியும் காடாகும்
கான் விலங்காய் எனை எதிரும்
நின் அங்கம் எங்கும்
பகலை இருள் பூசும்
நின் வதன எழில் நிலவு
பருகக் குவித்துதரும் நின் இதழோ
பகலில் ஒரு நிலாச் சோறு
நின் அகலின் தழல் நிமிர்த்தி
பருகக் குனிந்த முனிவன்
நிமிரக் கண்ட இருநிலவில்
எந்நிலவின் சோறு இப்பகலின் படையல்!