Sunday, December 13, 2009

பாசுர நாடகம் -- சில comments 1

2009/12/6 srirangammohanarangan v >

 
 
----  மஹாபாரதப்  போரிலே    ஜயத்ரத   வதத்தின்  போது     பகலை    இரவாக்க    வேண்டும்  என்று   ஒரு  க்ருத்ரிமத்திலே,   வஞ்சனையிலே    நீ    துணிய,    உனக்கு  முன்னாலே    ஓம்  பறைந்து   கொண்டு     உன்  க்ருத்ரிமத்துக்குக்  கூட்டாளியாய்ப்     பெருநிலை  நின்றானே     உன்  கையில்   எப்பொழுதும்    நீங்காமல்  திண்ணியதாக     இருக்கும்     சக்கரத்தாழ்வான்      அவனே      நீ   பொய்யன்  என்பதற்கு    என்றும்  உன்னை  விட்டகலா  சாட்சியன்றோ!      நீ   பொய்யிலே    விட்டகன்றாலும்     அவன்  விட்டு    அகலான்    என்றபடியன்றோ     அவன்    திண்மை  இருப்பது!  
க்ருத்ரிமத்தில்    உங்கள்  கூட்டு    இன்று  நேற்றா?     தொல்  படையல்லவா?     வேறு  அவன்     அவ்வப்பொழுது    பலரோடும்  க்ருத்ரிமத்துக்காகக்  கூட்டு   சேர்வது   உண்டோ  என்றால்  அதுவும்  கிடையாது.   எப்பொழுதும்,    அநாதிகாலமாய்    நீயும்  அவனுமே    சதா    சேர்த்தியான  கூட்டு   பொய்யிலும்,  வஞ்சனையிலும்.      நீ  ஒரு  அஸத்யத்தைச்   செய்ய   ஸங்கல்பித்தால்    அதை    ஸத்ய    ஸங்கல்பமாக    நடத்த  வல்ல    நிழறு   தொல்படையான்,  நிழறு  -  நடாத்துகை,  அவன்  அன்றோ?  
 
 
அருமை அருமை மோகனரங்கன்.   

 
பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாக, பத்தருக்கு இரதத்தைக் கடவிய பச்சைப் புயல், மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித்து அருள்வதும் ஒருநாளே அப்படின்னு பாடின அருணகிரிக்கு உள்ளேயும் இதே ஷேட்தான்.  பட்சத்தோடு ரட்சிப்பான். ஏன்னா, இவனுடைய மாமனும் இப்படியேதான் பட்சத்தோடு ரட்சித்தவன்தான் என்று, அவனுடைய பட்சபாதத்துக்கு சாட்சியாகக் கூப்பிடுவதும் இதே மஹாபாரத சம்பவத்தைதான்.  (ஆனால், ஆண்டவன் எப்போதும் தர்மத்தின் பட்சத்தில் என்பது நமக்குத் தெரியும்.  பக்தியின் பக்கத்தில்தான் அதிகமாக்கும் என்பார்கள்.  பக்தி இருக்கும் இடத்தில் அதர்மம் என்ற பேச்சுக்கே இடமிலலை.  அது வேற விஷயம்.  அப்புறமா பேசிக்கலாம்.)  இந்த சந்தர்ப்பம் எமெர்ஜென்சி சிசுவேஷன்.  கடவுளே தடுக்குன்னு உள்ள பாய்ந்தால் மட்டுமே தர்மத்தைத் தூக்கி நிறுத்தமுடியும் அப்படிங்கற சூழல்.  இந்த இடத்தை ருசித்து ருசித்து நிறையபேர் பாடியிருக்காங்க.  'எவ்வளவு அன்புடன், பக்தனுக்காக எவ்வளவு வேகமாக, மோசக்காரனாக நீ செயல்பட்டாய்' என்றெல்லாம் பாடிப்பாடி கிறங்குவதும் பக்தியின் இன்னொரு ஷேட்தானே....இங்க லாஜிக் வேலை செய்யாது.  செய்யக்கூடாது.  

 
 
 
என்னுரை
-----------------------
என்றோ  தொடங்கி    சதா  ஸர்வ  காலமும்   கடவுள்    நம்மை  அடைய   என்ன  என்னவோ  செய்து  பார்க்கிறது.     அந்தக்  கடவுளின்    பிடியிலிருந்து     தப்பித்துக்கொள்ள   ஜீவன்   என்னென்ன    வஞ்சனைகளோ,   பொய்களோ   செய்து   ஓடியவண்ணம்  இருக்கிறது.     சரி  தானாக  இந்த  ஜீவன்  தன்னை    நோக்கித்   திரும்பாதா  என்று   ஏங்கியபடியே     மறைவில்  தொடர்கிறது  கடவுள்.    என்றோ   ஒரு  கணத்தில்  இந்த  ஜீவன்     கடவுளை    நோக்கித்   திரும்பிவிடுகிறது.   அப்ப்பபா!    அந்தக்  கணத்தில்    ஜீவன்  திட்டுகின்ற  திட்டு  இருக்கிறதே    கடவுளை!!     ஏன்   இத்துணை  நாள்  என்னை   இப்படி  அலைய  விட்டாய்?     ஏன்   முன்னமெ  என்னை  நீ  ஆட்கொள்ளவில்லை?    உன்  அருள்  எங்கே  போயிற்று?     என்னை   இத்தனை  காலம்  உன்னை  இழக்க  வைத்தாயே?   அவர்க்கு   அருள்  செய்தாய்,  இவர்க்கு   கிருபை  புரிந்தாய்  ஆனால்  என்னை  மட்டும்     ஆதரவின்றி    அலையவிட்டாய்.   பாவம்  கடவுள்  என்ன  செய்யும்?    ஒரு  பக்கம்    தப்பித்துக்கொண்டு  ஓடாமல்    தன்னைத்   துண்டு  போட்டு  கேட்காத  குறையாய்    ஜீவன்   சண்டை  போடுவது,  அதுவும்    தன்னை  ஆட்கொள்ளாததற்காக,    எல்லா  வஞ்சனைகளையும்,   பொய்மைகளையும்    கடவுளின்    மேல்  சாட்டி   ஊடல்  கொள்கிறது      என்பது   கடவுள்   மகிழும்   ஒன்றுதான்    என்றாலும்,   இந்த   ஊடலின்   புதிர்....!!    கழறேல்  நம்பீ...! 
 

 

 
என்ன அழகா சொல்றீர் ஓய்! Francis Thompson எழுதின Hound of Heaven கவிதையை அப்படியே பிழிஞ்சு ஒரு பத்தியில் வார்த்துவிட்டீர்.  

 

 
 fled Him, down the nights and down the days;

 
I fled Him, down the arches of the years;
I fled Him, down the labyrinthine ways
Of my own mind; and in the midst of tears
I hid from Him, and under running laughter.
Up vistaed hopes I sped;
And shot, precipitated,

 
Adown Titanic glooms of chasmed fears,
From those strong Feet that followed, followed after.

 
But with unhurrying chase,
And unperturbed pace,

 
Deliberate speed, majestic instancy,

 
They beat - and a Voice beat
More instant than the Feet -

 
'All things betray thee, who betrayest Me'.

 
முழுக் கவிதையும் இங்க இருக்கு: 

 

 
இப்படி எத்தனையோ கவிதையிலும் வாழ்க்கையில் ஆழ்ந்து தோய்ந்து அனுபவிச்சவனுக்குதான் இப்படி எழுத முடியும்.  ஊத்துன்னா உள்ள இருந்து வரது!  உள்ளத்தில் உண்மையொளி உண்டானால் வாக்கினிலே ஒளியுண்டாம் என்பது மெய்யானால், வாக்கினிலே ஒளியிருக்கக் கண்டோமாயின் உள்ளத்தில் உண்மையொளி இருத்தல் காண்போம்.  என் மீனாட்சி உம்மையும் பிடித்து ஆட்டி வைக்கிறா.  (அது மீனாட்சியா இருந்தா என்ன, சரஸ்வதியா இருந்தா என்ன, ஹயக்ரீவரா இருந்தா என்ன.... சிதக்னி குண்ட ஸம்பூதா...)

--
அன்புடன்,
ஹரிகி.
 
 
ஐயய்யோ !   சித்  அக்னி  குண்ட  ஸம்பூதா  --  என்ன  வார்த்தைச்   சேர்க்கை இது!!!       'சொல்லுராய்ந்து  எழுந்த  தழல்'   என்பது   திருலோகம். 
 
உம்முடைய   வேலை  நெருக்கடிகளில்   இதைப் படித்து     கருத்தூட்டமும்    போட்டீரே!     சிறப்புதான்.
 
வர  வர   வள வளன்னு   கதை  பண்ண   ஆரம்பித்து  விடுகிறேனோ   என்று   பயம் வந்துவிடுகிறது.   உங்களைப்  போன்றோரின்  இடுகை   ஒரு   தெம்பைத்  தருகிறது.
 
ப்ரான்ஸிஸ்   தாம்ஸனின்  கவிதை மிக  அருமையான  ஒன்று  உலக  கவிதைகளிலேயே.    அதற்கு   திருலோக   சீதாராம்  அவர்களின்    தமிழாக்கம்   ஒன்று   1940 1941  ல்  வந்தது.     மிகப்   பொலிவான    தமிழாக்கம்.   அதன்    சிறப்பு   என்னவென்றால்     நேஷனல்  காலேஜ்   திருச்சியில்     பிரின்ஸிபாலாக    கல்லூரியையே   வளர்த்தெடுத்த     கல்வி  முனிவன்    திரு   சாரநாதன்   அவர்களிடம்    போய்    இந்தக்  கவிதையின்     தமிழாக்கத்தைக்  காட்டியிருக்கிறார்     நம்    கவிஞர்    பெருமான்     திருலோகம்.    (இத்தனைக்கும்    எட்டாவது    தாண்டவில்லை    இந்த    சரஸ்வதியின் செல்ல  மகன்)     நீலகண்ட  சாஸ்திரி    முதலானோரின்    பாட்ச்சில்     ஒன்றாகப்  படித்துத்  தேறி     ஆங்கிலத்தில்   பிரிட்டிஷாரே   கண்டு  வியக்கும்  புலமை    பெற்ற   சாரநாதனிடம்      எட்டாங்கிளாஸ்  படித்துவிட்டு    கிராம  ஊழியனில்   வேலை  பார்த்துக்கொண்டு   இருக்கும்   ஓர்   இளைஞர்     மிகக் கடினமான   ஆங்கிலக்  கவிதையைத்  தமிழ்க்கவிதையாக்கிக்   கொண்டுபோய்க்   காட்டுவது  என்றால்     என்ன   துணிச்சல்?     'பார்க்கிறேன்'   என்று  சொல்லிவிட்டார்     பிரின்ஸிபால்.     சில  நாள்  கழித்து     அபிப்ராயம்  அறியச்  சென்றிருக்கிறார்     சீதாராம்.     அலுவலகத்தில்    போய்க்  கேட்டால்     வகுப்பறைக்குப்  பாடம் எடுக்கப்  போயிருக்கிறார்    என்று  தெரிந்தது.      'சரி    வகுப்பறையின்   மருங்கே  எங்கானும்    போய்  நிற்போம்.   நம் காதிலும் கல்லூரிப்  பாடம்  விழட்டுமே'  என்று  போனால்      மிகுந்த   ஆச்சரியமும்     நெகிழ்வும் காத்திருந்தது  கவிஞருக்கு !!      வகுப்பில்   ப்ரான்ஸிஸ்   தாம்ஸந்தான்     பாடம்.     விரட்டிவரும்  விண்ணின் வேட்டை  நாய்   கவிதைதான்    பாடம்.    சாரநாதன்     தன்னுடைய   உச்சத்தில்    மிதந்தபடி   பொழிகிறார்.      ஆங்கிலத்தில் அன்று!.   கவிஞரின்    தமிழாக்கத்தை.   கண்ணி  கண்ணியாக    சுவைத்துச்  சுவைத்து ,   ஓர்  ஆங்கிலப்  பேராசிரியர்,    ஆங்கில  மேதை   என்று     அயல்நாட்டார்,     இந்திய   அறிஞர்கள்  அனைவருமே   கொண்டாடிய   ஒரு    கல்லூரி  பிரின்ஸிபால் (அந்தக் காலத்து  பிரின்ஸிபால்  என்க )     ஆங்கில  வகுப்பில்    ஆங்கிலக்  கவிதையைத்     தமிழாக்கத்தை  வைத்துக்கொண்டு   பாடம் நடத்துகிறார்!!!    எப்படி  இருந்திருக்கிறது  கதை.     இந்த   அகடித  கடனா  ஸாமர்த்தியம்  எல்லாம்    எங்கள்  திருச்சிக்கே    உண்டான     ஸ்வபாவம். :--)))    கேட்ட  கவிஞர்    அப்படியே   சிலையாகி  நின்றுவிட்டார்.     அந்த  மூடிலேயே     கவிஞர்   லாங்பெலோவின்     லாஸ்ட்   ஏரோ   என்பதை  மொழிபெயர்த்தார்.  அதுதான்  'வில்  வளைத்து   நாணேற்றி    விட்ட  சரமொன்று'   என்று  ஆரம்பிக்கும்.   
பிறகு     அந்த   வேட்டைநாய்  கவிதையை    அமுதசுரபி  விக்கிரமன் கேட்டு  வாங்கிப்   போட்டார்   பிற்காலத்தில்.     பழைய  அமுதசுரபி    பிரதிகளில் தேடவேண்டும்.    இல்லையேல்    கணேசனார்    போன்றவ்ர்கள்     கிருபை செய்ய  வேண்டும்.     
 
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்   
 
 
From: N. Kannan
சரிதான்! அவருக்கு ரொம்ப சப்போர்ட்டான்னா இருக்கு!

இந்த மாயையை யார் முதலில் உருவாக்கச் சொன்னது? அதது,
நாக்கத்தொங்கப்போட்டுண்டு அலையறதுகள் ;-) பரிதாபமாய் பரிதவிக்க விட்டு
விட்டு பிறகு நேரே பார்த்துக் கேட்டா, தப்பா?

இன்னும் ஆயிரம் சடகோபன்கள் வேணும், அது கல்லுளி மங்கன்.

இதோ நான் இருக்கேனே, பாத்துக்கறேனேன்னு சொல்லிட்டு பக்கதுலே அழைச்சு
உட்காரவச்சுட்டுப் போனதுதான். ஆளே திரும்பலே! ஆயிரம் சாட்சி இருக்கு. அது
லேசுபட்ட ஆளில்லை.

ரங்கன் சொல்லறாரேன்னு சட்டுனு நம்பிடாதேங்கோ!

கள்ளன்ன்னா கள்ளன் வழிச்செடுத்த கள்ளன்!

(அப்பாடா! அடியார் கூட்டத்திலே சீட்டு வாங்கியாச்சு. பாராங்குசாளே சரணம்!)

க.>
 
அன்பின் ரங்கன்:

படிப்படியாக ஒரு பனுவலை (TEXT) எப்படி அணுகுவது என்று செவ்வியலக்கியம்
சார்ந்து விளக்கி வருகிறீர்கள். நிச்சயமாக இலக்கிய உள்ளம் உடைய மின்தமிழ்
அன்பர்களுக்கு இது உவப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

திருவாய்மொழியில் 'ஆழங்காட்படுதல்' என்றால் என்னவென்று மிகத்தெளிவாகக்
காட்டியுள்ளீர்கள். நம்மாழ்வாரின் உண்மையான உளக்கிடக்கை, அதாவது
அப்பாசுரம் அருளிய சமயத்தில் எப்படி இருந்திருக்கும் என்றறியும்
சான்றோரின் பாங்கு எம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. பனுவலில்
மறைந்திருக்கும் மௌனம் என்பதை இவர்கள் கண்டறியும் திறம்! அடடா!

இதே பாங்கில்தான் அரங்கத்து உரையாசிரியர்கள் திருப்பாவையை அணுகி விளக்கம்
சொல்லியிருக்கின்றனர். அவர்கள் அப்படி விளக்கவில்லையெனில் நமக்கு ஆண்டாள்
அங்கொரு தொடர் உரையாடலை வைக்கிறாள், பல நாடகக்காட்சிகளைக் காட்டுகிறாள்
என்பது தெரியாமலே போயிருக்கும்.

தாங்கள் செய்யும் இந்த அரிய தமிழ்ப்பணியின் நீட்சியாக 'மடலாடற்குழு
உரையாடல்' என்பது எப்படி அமைய வேண்டுமென தனியிழையில் பேசலாமா?

சிந்தனை என்பதை நாம் பனுவல் என்று கொண்டால், சிந்தனை வெளிப்பாடு
எவ்வகையில் இருக்க வேண்டும்? அதன் நோக்கு எப்படி அமையவேண்டும்.

தமிழ் மடலாடற்குழுக்கள் எல்லாம் இந்த அரிய ஊடகத்தை வெறும் அபிப்பிராயம்
பறிமாறிக்கொள்ளும் தளமாக ஆக்கிவிட்டன. அபிப்பிராயம் என்பது மென்றதையே
மென்னும் ஒரு பசுமாட்டுச் செயல். அபிப்பிராயங்கள் நம்மை சிறை வைக்கின்றன.
விடுதலை செய்வதில்லை.

எனவே மடலாடல் உரையாடல் என்பது எப்படி அமையவேண்டும். அது மானுட
விடுதலைக்கு எப்படி வித்திடமுடியும்?

நம் தளைகள் களையும் வழியாக இவ்வூடகம் உதவுமா?
 

கண்ணன்