Friday, September 23, 2011

தேசியம் - 4

Approach Thou, O Mother!, Deliverer! 
Thy children, Thy nurslings are we! 
On our hearts be the place for Thy stepping. 
Thine own, Bhumya Devi, are we. 
Where lead they, O Mother! 
Thy foorfalls? 

(The Footfalls, Sister Nivedita ) 

It is characteristic of India that almost every great outstanding thought and doctrine has somewhere or other a place devoted to its maintenance and tradition. This brings us to the thought of the geographical synthesis. The whole of India is necessary to the explanation of the history of each one of its parts.....India is at once the occasion and the explanation of the web of Indian thought. (Footfalls of Indian History, Sister Nivedita, pp8) 


Cities are the schools of nationality, even as a nation is made up of all its citizens. 

The mind of our civilisation is awake once more, and we know that the long ages of theocratic development are perfected, while before us lies the task of actualising those mighty ideals of the civic and national life by which the theocratic achievements of our fathers are to be protected and conserved. 

As the architect builds to a plan, so is a nation fashioned by its own dreams. And he who knows this, knows also how to use his power of dreaming. 

(Sister Nivedita, Civic Ideal and Indian Nationality) 

*** 

மதலையர் எழுப்பவும் தாய் துயில்வாயோ? 
மாநிலம் பெற்றவ ளிஃதுண ராயோ? 
குதலை மொழிக்கிரங் காதொரு தாயோ? 
கோமக ளேபெரும் பாரதர்க் கரசே! 
விதமுறு நின்மொழி பதினெட்டுங் கூறி 
வேண்டிய வாறுனைப் பாடுதுங் காணாய். 
இதமுற வந்தெம்மை யாண்டருள் செய்வாய், 
ஈன்றவ ளேபள்ளி யெழுந்தரு ளாயே! 

(பாரதியார் கவிதைகள்) 

இந்தியாவின் விசேஷம் என்னவென்றால், அதில் தோன்றிய ஒவ்வொரு மகத்தான கருத்தும், சித்தாந்தமும் தனக்கென்று ஒரு பிரதேசத்தைத் தன்னை போஷிப்பதற்கும், தன் மரபைப் பேணுதற்குமாகக் கொண்டதுவாய் இருக்கிறது. இதனால் நாம் பூகோள ரீதியான பிரதேச ஒருங்கிணைப்பற்றிச் சிந்திக்க வேண்டியிருக்கிறது. இந்தியாவின் தனித்தனிப் பகுதியைப் பற்றிப் பேச வேண்டுமானால், இந்தியா என்ற ஒட்டுமொத்தத்தைப் பற்றிப் பேசித்தான் தனித்தனிப் பகுதியைப் பற்றிப் பேச முடியும் என்ற நிலை அமைந்திருக்கிறது. .......இந்தியாவின் மொத்த சிந்தனைக் கூட்டுப்பிணைப்புக்கு இந்தியா என்ற முழுமையுமே நிமித்தமும் விளக்கமுமாய்த் திகழ்கிறது. 

நகரங்கள் என்பன தேசியத்தின் பள்ளிக் கூடங்கள். தேசம் என்பது அதன் அனைத்துக் குடிமகர்களால் ஆனது. 

நமது நாகரிகத்தின் மனமானது விழித்துக் கொண்டு விட்டது மீண்டும். நமக்குத் தெரிந்து இறையியல் துறையின் நெடுங்கால வளர்ச்சிகள் முழு செம்மை அடைவதை ஒப்ப, நம்முன் இருக்கும் பெரும் பணியான நகர வாழ்வு, தேசிய வாழ்வு ஆகியவற்றுக்கான மாபெரும் இலட்சியங்களை நடைமுறையில் அடையப் பெறுதல் என்பது முன் நிற்கிறது. அவ்வாறு அடையப் பெறுவதாலேயே அந்த இறையியல் துறை வளர்ச்சியின் செம்மையாக்கங்களையும் நாம் போற்றிப் பாதுகாக்கவும் வேண்டும். 

ஒரு கட்டிட இயல் அறிஞர் அடிப்படைத் திட்டத்திற்கேற்பவே கட்டடத்தை எழுப்பவது போலவே ஒரு தேசமும் அதன் கனவுகளின் அடிப்படையிலேயே எழுப்பப் படுவது. இதை யார் உணர்ந்திருக்கிறார்களோ அவர்தான் கனவு காணும் ஆற்றலை எப்படிப் பயன் படுத்துவது என்பதையும் அறிந்தவராவார். 

(தமிழாக்கம் என்னுடையது) 

*** 


The elements of nationality are civic and to these civic components it is that the individual stands most directly and most permanently related. 

By civic duty we are tested for national responsibility. 

The city as a whole is but a visible symbol of this life behind it. 

The city is something more than the aggregate of the homes that compose it. 

The highest visible symbol of human aspiration may perhaps be an altar. The most perfect visible symbol of our unity is undoubtedly a city.

It is clear that as the city is more than an aggregate of private homes, so the commune represents a grouping that transcends the family in complexity and importance. 

What we call public spirit is simply the reflex in a given personality of the civic consciousness. That is to say, public spirit is the expression of that character which is born of constantly placing the ego, with the same intensity as in the family, in a more complex group. Thus come into being new duties and new responsibilities, and the ideal of civic integrity towers above all the lower and more private achievements of the kindred, or the clan.

(Sister Nivedita, Civic Ideal and Indian Nationality) 

***

தேசியத்தின் குருத்தன்ன அம்சங்களைப் பார்த்தால் அவை நகரநலம் சார்ந்த கூறுபாடுகளாய் இருக்கின்றன. இந்த நகரநலம் வேட்கும் அமைப்பியல் கூறுகளோடுதான் மனிதர் மிக அணுக்கமாகவும், நிரந்தரமாகவும் தொடர்பு கொண்டிருக்கின்றனர். 

நகரநலம் சார்ந்த கடமைகளின் மூலம்தான் நமது தேசியப் பொறுப்புணர்ச்சிகள் பரிசோதிக்கப் படுகின்றன. 

நகரம் என்பதன் கருத்து சான்ற முழுமையும் பார்க்கப் போனால் தேசிய வாழ்வின் உயிரோட்டத்தின் ஒரு வெளிப்படையான குறியீடுதான். 

நகரம் என்பது அதனுள் அமைந்திருக்கும்  வீடுகளின் மொத்தம் மட்டுமன்று, அதனினும் மிக்கதோர் மெய்மை. 

மனிதரின் உயர்வூக்கத்தின் உன்னதமான குறியீடு தெய்வ பீடமாக இருக்கலாம். ஆனால் மனித ஒற்றுமையின் ஆகச்சிறந்ததும், வெளிபடையானதுமான குறியீடு ஐயமேயின்றி நகரம்தான். 

சொந்த தனித்தனி வீடுகளின் மொத்தத்தினின்றும் மிக்கதும் வேறுபட்டதும் ஆக நிற்பது நகரம் என்பதைப் போலவே ஒத்த உணர்வுகளால் குழுமி நிற்கும் கூட்டம் என்பது குடும்பம் என்பதைக் காட்டிலும் அதிகமாகப் பின்னிப் பிணைந்த இயல்பினாலும், முக்கியத்துவத்தாலும் விஞ்சி நிற்பது. 

பொது நல உணர்வு என்று நாம் சொலவதெல்லாம் ஒரு குறிப்பிட்ட ஆளுமையில் நகர்நல உணர்வின் இயக்க எதிர்பலிப்புதான். அதாவது நகர்நல உணர்வு என்பது ஒரு குறிப்பிட்ட தன்மைப் படிவம் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதுதான். அந்தத் தன்மைப் படிவமானது எதனால் ஏற்படுகிறது என்றால் தான் என்பதை ஒரு குடும்பத்தில் வைப்பதைப் போன்றே அதே தீவிரத்துடன் குடும்பத்தைக் காட்டிலும் அதிக பிணைந்த தொடர்புகளால் ஆகிய குழுவிலும் வைப்பதனால் ஏற்படுவது. அவ்வாறுதான் புதிய கடமைகளும், புதிய பொறுப்புகளும் உருவாகின்றன. அதனாலேயே நகர்நலம் கெழுமிய ஒருங்கிணைப்பு என்னும் இலட்சியமானது தன் சுற்றம், இனம் என்பனவற்றையெல்லாம் சார்ந்த சாதனைகளையும் கடந்து விஞ்சிய மகத்துவம் கொண்டதாய் விளங்குகிறது. 

(தமிழாக்கம் என்னுடையது) 

*** 


தேசியத்தின் உயிர்நாடி எது? தேசிய உணர்வின் உறுதி. 

சென்று மறைந்து போன பழங்காலத்தையெல்லாம் அப்படியே தூக்கிக் கொணர்ந்து வந்து வழிபடுதல் என்பது தேசியம் அன்று. 

எக்காலமும் தேசத்தின் ஆளுமையாய் நிலவும் அம்சங்களை மீளவும் உணர்வு பூர்வமாக நிலை நிறுத்திக் கொள்ளுதல் என்பதுதான் உண்மையான தேசியம். 

பாரதியார் The National Revival  என்ற தலைப்பில் Bala Bharata என்னும் இதழில் 1907 ஆம் ஆண்டு எழுதிய ஆங்கிலக் கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார். 

"We desire to revive not the ancient forms and appearances, but the ancient virtues, the ancient character, the ancient Dharma. We want to revive the qualities of fearlessness, self-denial for public good, self-sacrifice, love of country etc.,.....We want to revive originality of thought and of conception, spontaneous action not stimulated from outside, daring to execute great responsibilities, in short, we want to revive the National Will." 

இந்த National Will என்பதை மீண்டும் எழச்செய்வதுதான் இன்றைய தேசியத்தின் விடியல். இந்த தேசிய உணர்வைக் கட்டிக் காப்பதுதான் பண்டைய காவியங்களைக் கற்றலினால் ஆகும் பயன்களில் ஒன்று. 

அது மட்டுமின்றி ஒரு தேசம் புறவயமாக மிகவும் அடிப்படையாகப் பார்த்தால் அதன் வயல்களில் இருக்கிறது என்பதை மறந்து விடக் கூடாது. வயிற்றுக்குச் சோறு என்பது மட்டுமன்று அதன் முக்கியத்துவம். குடிமகர்கள் முதன் முதலில் ஜனநாயகத்தைக் கற்கும் இடமாகவும் திகழ்வது வயல்கள்தாம். 

நம் நிலம் நம்மைக் காக்கிறது. நம் நிலத்தை நாம் நன்கு பேணுகிறோம். நிலத்தின் மக்களாகிய அனைவரும் சேர்ந்து இந்த நிலத்தில் இறங்கி உழைக்கிறோம். இது நம்முடைய நிலம் -- என்ற இயற்கையான ஸ்வதேசப் பற்றை மிகவும் பௌதிகமாகப் போதிக்கும் ஆரம்பப் பள்ளிக் கூடமே வயல்தான். 

ஒரு நாட்டின் ஆட்சி எவ்வளவுக்கெவ்வளவு வயலை முக்கியமாகக் கருதுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அந்த நாடு சிறக்கும். 

Responsibility என்னும் கட்டுரையில் சகோதரி நிவேதிதா கூறுவது: 

"In India and the East generally, it is supposed, in similar fashion, that the great concrete experience on which the national character is built, and by which its potency for cooperation is largely determined, is the rice-field." 

தேசம் என்பதற்கு வயல் மிகவும் அடிப்படை என்பதை உணர்ந்தே வெள்ளைக்குடி நாகனார் புறநானூற்றில் பாடுகிறார். 

"............ 
அறம்புரிந்தன்ன செங்கோல் நாட்டத்து 
முறைவேண்டு பொழுதில் பதனெளியோர் ஈண்டு 
உறைவேண்டு பொழுதில் பெயல் பெற்றோரே. 
ஞாயிறு சுமந்த கோடுதிரள் கொண்மூ 
மாக விசும்பின் நடுவு நின்றாங்குக் 
கண்பொர விளங்குநின் விண்பொரு வியன்குடை 
வெயின்மறைக் கொண்டன்றோ அன்றே வருந்திய 
குடிமறைப் பதுவே கூர்வேல் வளவ.... 
................................................................ 
பொருபடை தரூஉங் கொற்றமும் உழுபடை 
ஊன்று சால் மருங்கின் ஈன்றதன் பயனே" 

உன்னுடைய செங்கோலின் நாட்டம் வெறுமனே சட்டம் என்பதைச் செயலாக்குவது மட்டுமன்று. அறம் புரிதல்தான் அந்தச் செங்கோலின் உண்மையான பயன். 

தங்கள் நிலை இழந்த எளியவர்கள் தமக்கு நியாயம் வழங்க வேண்டிய காலத்து அவர்கள்பால் மழையைப் போன்று கருணை செய்து அவர்களுக்கு உரிய முறை வழங்க வேண்டும். 

மலையின் உச்சியிலிருந்து பரவி நிற்கும் மேகமானது சூரியனை மறைத்து நிற்கும். அது போல் அரசனது வெண்கொற்றக் குடை வெறுமனே வெய்யிலை மறைப்பதற்கான குடையாகப் பயன் படவோ இருக்கிறது. இல்லை. குடிகளின் வருத்தத்திலிருந்து குடிகளைக் காக்கவன்றோ அந்த வெண்கொற்றக் குடை விரிந்துள்ளது. 

அரசனது கையில் பிடித்த கோடாத செங்கோலுக்கும், குடிகளுக்கு வருத்தம் தவிர்க்கும் விதத்தில் விரித்த குடைக்கும் நோக்கம் ஒன்றேயாம். 

அத்தகைய அரசாட்சியும், பகைவரைப் பொருது வெற்றியைத் தேடித்தரும் படையும் உண்மையில் உழுபடையின் ஊன்று சால் மருங்கில் விளையும் விளைச்சலின் பயன் தான் என்பது சொல்ல வேண்டியதில்லை.--- 

உழவு என்பதும், நெல் என்பதும் அவ்வளவு முக்கியம் என்ற காரணத்தால்தான் ஒரு கட்டுரையில் பாரதியார் வயலில் நெல்லுக்குப் பதில் ஔரியையும், மணிலாக் கொட்டையையும் காசுக்காகப் பயிர் செய்வதைக் கண்டித்து எழுதுகிறார். 

Rice-field is highly symbolic of Nationalism. 

***


நிலத்திற்கும், மக்கள் நீர்மையின்பால் படும் தேசிய உணர்வுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கும் காரணம் பற்றியே பாரதி, பாரத ஸமுதாயம் என்ற பாடலில், முதல் சரணத்தில் நில வளத்தைச் சொல்லி, அடுத்த சரணத்தில் உணவு என்பதை highly symbolic ஆக ஆக்கி, மூன்றாவது சரணத்தில் மனிதரின் நீர்மையின் உச்சக் கட்டத்தைத் தொட்டுக் காண்பித்து, இந்த உயரிய கல்வியின் பள்ளிக்கூடம்தான் தேசியம் என்பதை நாலாவது கண்ணியில் காட்டுகிறான். 

பாரத ஸமுதாயம் வாழ்கவே என்றவன், 'முப்பது கோடி ஜனங்களின் ஸங்க முழுமைக்கும் பொது உடைமை' 

எது? 

ஒப்பிலாத ஸமுதாயம், உலகத்துக்கொரு புதுமையான பாரத ஸமுதாயம். 

முதல் சரணத்தில் -- மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனி உண்டோ? மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனி உண்டோ? -- என்று சீறியவர், 'இனிய பொழில்கள், நெடிய வயல்கள், கனியும் கிழங்கும் தானியங்களும் மிகுந்த நில வளத்தைக் காட்டுகிறார். 

அடுத்து ஸமுதாய வாழ்வின் படிக்கட்டு ஆரம்பம் ஆகிறது. 'பசித்தவனுக்குச் சோறுதான் கடவுள்' என்பார் விவேகானந்தர். Agricultural self-sufficiency என்பதுதான் ஒரு பெரும் வல்லரசு நாடாக ஆவதற்கு அடிப்படை என்று நாம் கவனிக்கத் தவறிய பொருளாதாரம் சொல்கிறது. அந்தக் கருத்தை எதிர்முகமாகப் பாடிக்காட்டுகிறார், 'தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்' என்று. 

அடுத்து பசி தீர்ந்திட, பல்கலைகளும் மலர்ந்திட, பான்மைகள் செழித்திட, தேசியக் கல்வி பூரணம் எய்திட, அதன் உச்சிச் சாதனையாய்த் திகழும் ஆன்மிக உலக உயிர் ஒருமைப்பாட்டைக் காண்பித்து, அதன் ஞானாசிரியப் பதவி இந்தியாவிற்கு என்று முடிக்கிறது பாரதியின் தேசிய ஸிலபஸ். 

'"எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன்" 
என்றுரைத்தான் கண்ண பெருமான் 
எல்லாரும் அமரநிலை எய்துநன் முறையை 
இந்தியா உலகிற் களிக்கும்' 

என்று தேசியத்தின் கொடுமுடியைக் காட்டியவர், தேசியம் அனவரதமும் ஜபிக்கும் மந்திரத்தையும் கடைசியில் முத்தாய்ப்பாக வைக்கிறார். 

'எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம் 
எல்லாரும் இந்தியா மக்கள் 

எல்லாரும் இந்நாட்டு மன்னர் - நாம் 
எல்லாரும் இந்நாட்டு மன்னர்' 

***

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

*