Sunday, October 02, 2011

தற்கால ஆன்மிகம் - 1


பேசிப் பேசியே ஒரு ஜன சமுதாயத்தை உணர்ச்சிகள் பேதலிக்கச் செய்து வன்மத்தால் விகாரமாக்கிய ஒர்க்‌ஷாப்பைப் பார்க்க வேண்டுமா? 



வன்முறை என்னும் குரங்கால் ஆட்டப்பட்ட கோமாளி இவர் என்றால், இவரை அசுர சக்திகள் ஆட்கொண்டு விட்டன என்றும் பாண்டிச்சேரியில் இருந்துகொண்டு தன் யோக சக்தியால் இவருள் புகுந்து கொண்டு தடுப்பதால்தான் ஏதோ நாசிக்களின் கொடுமை அந்த அளவிற்காவது கட்டுக்குள் வந்ததாய் சொல்லிக் கொண்டிருந்த அரவிந்தர், அன்னை கூட்டணியின் கோமாளித்தனம், என்னவென்று சொல்ல? 

இந்த அட்டை மீசை ஆளை நேரேயே போய்ப் பார்த்து இந்திய விடுதலைக்கு ஒப்பந்தம் இட்டுவந்த சுபாஷ் சந்த்ர போஸ், அவர் செய்த அவசரக் குடுக்கைத்தனம்! 

மனிதன் அறிவைப் புறக்கணித்தால் என்ன நடக்கும் என்பதைத்தான் இதெல்லாம் காட்டுகின்றன. 

*** 

உண்மையான கோமாளியாவது தான் மற்றவரைச் சிரிக்க வைக்க வேண்டும் என்று சேட்டைகள் செய்வான். ஆனால் பைத்தியக் காரக் கோமாளிக்கு எந்த வ்யவஸ்தையும் கிடையாது. 

ஆனால் அது ஒரு பக்கம் என்றால் முக்கியமான கட்டத்தில் சுதேசி இயக்கத்திலிருந்து விலகி, தவம் யோகம் பயிலப் போகிறேன் என்று முடிவெடுத்து பாண்டிச்சேரிக்கு வந்து, (ஸ்ரீரங்கத்திலிருந்து கொடியாலம் ரங்கசாமி ஐயங்கார் முதற்கொண்டு ஆள் வந்தாய் விட்டதா என்று பார்க்க ஆள் அனுப்பும் படியாக வந்து சேர்ந்து) கடும் சுதந்திரப் போராட்டக் காலத்திலெல்லாம் யோகம் என்று இருந்துவிட்டு உலகச் சூழல்கள் முற்றிக்கொண்டு வரும் வேளையில், எங்கோ ஒரு கோமாளி கிறுக்கு பிடித்து ஓரினத்தையே கொன்று குவிக்கும் வேளையில், அவன் மனத்திற்குள் யோக சக்தியால் புகுந்து, அப்படிக் கொல்லாதிருக்க வழிதேடாமல், காஸ் சாம்பரில் குழந்தைகள், கிழவர்கள் குப்பல் குப்பலாகக் குவித்து வைத்தபடி விஷவாயு புகுத்திக் கொல்லும் போதெல்லாம் ஒன்றும் செய்யாத யோக சக்தி,பிரிட்டன் மேல் அவன் படையெடுக்காதிருக்க மாத்திரம் அவன் உள்ளே புகுந்து அசுர சக்தி ஆவேசத்தை மாற்றிய Pious கோமாளித்தனத்தை என்னென்று சொல்வதென்றே உண்மையில் தெரியவில்லையே.! 


இவர் ஒரு பக்கம். இவருக்குப் பக்கம் நின்று அன்னை சொன்னது நிஜம்மாகவே புரியவில்லை. தன் யோக சக்தியால் ஹாலில் இருக்கும் கொசுவையெல்லாம் விரட்டுவதாகக் கூறினார். 

***


ப்ரிட்டிஷ் காரர்கள் நிறைய தவறுகள் செய்தனர். ஆனால் மனிதர்கள் என்ற வகையில் நின்றவர்கள். 

ஹிட்லர் வெறி பிடித்த ஒரு பைத்தியக் காரன். அபாயகரமான கோமாளி. அவனை மனிதன் என்று சொல்லிவிட்டு நீங்கள் உங்களையும் மனிதர் என்று சொல்லிக்கொள்ள முடியாது. 


அதாவது ஓர் உதாரணம் சொல்லிப் பார்க்கலாம். 

ஹிட்லர் விடியற்காலையில் பனி விலகி கதிர் தடவும் வேளையில் ஒரு சாலையின் ஓரம் அழகான பச்சிளம் குழந்தையைப் பார்க்கிறான். அது ஒரு யூதக் குழந்தை என்று அவன் அறிய நேரிடுகிறது. 

அதே போல் ப்ரிட்டிஷ்காரரில் ஒரு படு மூர்க்கனான மிலிடரி ஆபீஸரும் ஒரு குழந்தையைப் பார்க்கிறான். இந்தியக் குழந்தை என்று வைத்துக் கொள்வோம். 

ஹிட்லரின் ரியாக்க்ஷன் -- அந்தக் குழந்தையை அதுவரை காஸ் சாம்பரில் போடாத ஆபீஸரைச் சிறையில் அடைத்துச் சித்திர வதை செய்வான். 

மோசமான ப்ரிட்டிஷ் ஆபீசர் ஒரு ரியாக்க்ஷனும் இல்லாமல் போய்க் கொண்டிருப்பான். 

இதுதான் வித்யாசம். 

*** 

சுபாஷோ, குடுகுடுன்னு போனான் குடுமியைச் சிரைச்சான்னு ஹிட்லரைச் சந்தித்து அவனை ஏதோ ஒரு உலகத் தலைவராக தார்மிக அங்கீகாரம் கொடுத்தது வேற என்னன்னு சொல்றது. 

***

சுபாஷ் போஸின் நல்ல அம்சங்கள் நானும் அறிவேன். உண்மையில் காந்தி ரீதியான வழியை விட சுபாஷின் பந்தா என்னைக் கவர்ந்த ஒன்று. ஆனால் அது வேறு. இந்த விஷயத்தில் சுபாஷ் பண்ணிய blunder வேறு. 

***

The Nazi formations were trained to vent fury and sow terror -- to break up meetings of opponents, to administer beatings, provoke street fights, stage riots, mutilate bodies, kick in skulls. These were the methods by which Hitler proposed to make his nationalism, his socialism, and his promises to every group come true. 

The method was brute destruction, and from the beginning the Nazis presented it to the country as such, with little attempt at apology or cover-up. In this regard, Hitler himself was the most eloquent party symbol: wild-eyed, gesticulating, raving -- contorted by a frenzy to kill and avidly explicit about it. 

(pp 187, The Ominous Parallels, Leonard Peikoff ) 

நாசிஸம் பற்றி ஆழமாகவும், துல்லியமாகவும் மிகவும் தெரிந்து கொள்ளாமல் இருப்பது பொதுவான மன ஆரோக்கியத்திற்கு நல்லது. ஏனெனில் சிலர் கற்பனை செய்து கொள்வது போல் அது ஏதோ ராஜதந்திரமோ, அல்லது சமய சந்தர்ப்பவாதமோ, அல்லது வலிமையுள்ளவன் சாம்ராஜ்யத்தைப் பிடி என்ற கண்மூடித்தனமோ அன்று. மிக மிக நிதானமாக, நன்கு தெரிந்து மனித குலத்தின் மேல் பரிச்சோதனையாகக் கட்டவிழ்த்து விடப்பட்ட 'மானிடப் பரிசோதனை'. ஏன் மானிடப் பரிசோதனை என்று சொல்கிறேன் என்று பார்க்கிறீர்களா? என்ன செய்தால் மானிடன் தன் சுதந்திர உணர்வு தூள் தூளாகி அவன் உள்ளத்தாலும், செயலாலும் சொன்னபடி செய்யும் ரோபோவாக ஆவான் என்று செய்யப்பட்ட சோதனை. அந்தச் சோதனையின் பிரதான அங்கம் 'மனிதப் பிராணிகளின் குவிப்பு முகாம்'. உலகத்தில் எந்த ஒரு பைத்தியக் காரக் கொலைகாரனாவது சிறிதும் தன் நோக்கம், தன் எண்ணம் என்பதை உரக்கக் கூவி ஊர் உலகெல்லாம் அறிய உரைத்துவிட்டுச் செய்தவன் உண்டு என்றால் அது இந்த அட்டை மீசைச் சைகோ கோமாளிதான். நம்ப முடியவில்லை என்பது நம்முள் ஊடுருவி நிற்கும் மானிடத்தைக் காட்டுகிறது. ஆனால் ஒரு விதத்தில் அரவிந்தர் கூறியது சரி. அவனைப் புரிந்து கொண்ட எவருமே அவனை மனிதனாகச் சொன்னதில்லை. மானிடத்தின் மீது அக்கறை கொண்டவர் அசுர சக்தி ஆவேசம் புகுந்துவிட்ட பைத்தியக்காரன், கொடூர உள நோய் பிடித்தவன் என்றார். ஃப்யூரர் என்ன சொன்னாலும் அது சரி என்ற ஜெர்மனின் பெரும்பான்மை மக்கள் அவரை புத்துலகச் சிற்பி என்றும், அவர் நோக்கத்திற்குத் தங்கள் அனைத்தையும் தியாகம் செய்தல் கடமை என்றும் கருதினர். 
***

கம்யூனிஸ்டுகள் தாங்கள் கருதிய நோக்கமே வேறு மொழியில் ஃப்யூரரால் அமுல்படுத்தப் படுவதாகக் கருதினர். அதாவது சிறைக்குச் செல்லாத கம்யூனிஸ்டுகள். 

***


ஹிட்லரை இந்த அளவுக்கு ஆக்கியது யார்? அந்த மக்களேதான். தங்கள் அறிவுக்குப் பகை என்று தெரிந்தும் தங்கள் வாழ்வுக்குத் துணை என்று இறுக்கப் பிடித்துக் கொண்டார்கள். 

"We are now at the end of the Age of Reason" Hitler declared to Hermann Rauschning. "The intellect has grown autocratic, and has become a disease of life." 

................... 

What should men appeal to for guidance once the intellect has been rejected? 

"We must distrust the intelligence and the conscience," states Hitler, "and must place our trust in our instincts." 

"Trust your instincts, your feelings, or whatever you like to call them" says Hitler. 

"At a mass meeting", says Hitler to Rauschning, "thought is eliminated. And because this is the state of mind I require, because it secures to me the best sounding-board for my speeches, I order everyone to attend the meetings, where they become part of the mass whether they like it or not, 'intellectuals' and bourgeois as well as workers. I mingle the people. I speak to them only as the mass." 

"People set us down as enemies of the intelligence," declared Hitler. "We are. But in a much deeper sense than these conceited dolts of bourgeois scientists ever dream of." 

------------ 

"When I hear the word 'culture' said Hanns Johst (President of the Reich Theater Chamber), in an immortal line, "I slip back the safety-catch of my revolver" 

(pp46,47,48 The Ominous Parallels, Leonard Peikoff) 



Only in miserable ignorance a man can afford to compare Hitler with other dictators. 

*** 




ஸ்ரீஅரவிந்தர் ஹிட்லரின் உள்ளுக்குள் யோக சக்தியால் புகுந்து பிரிட்டன் மேல் படையெடுக்கும் முடிவை மாற்றிக் கொள்ளுமாறு செய்தார் என்பது பயஸ் கோமாளித்தனம் என்றால், பழம் புராணங்கள், அருளாளர்கள், ஆன்மிகச் செல்வர்களின் வாழ்க்கையில் நடந்த அதீத நிகழ்வுகள் இதெல்லாம் மட்டும் ரொம்ப அறிவுக்கு உட்பட்டதா? கோமாளித்தனம் அற்றதா? அப்பொழுது இதை நோண்டினால் அதையெல்லாம் ஆதியோடந்தமாக நோண்ட வேண்டாமா? 

இந்தக் கேள்வியில் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது. ஸ்ரீகிருஷ்ணன் பிறந்த போது அவரை நள்ளிரவில் தலையில் எழுந்தருளப் பண்ணிய வசுதேவனுக்கு ஆறு விலகி வழிவிடலாம். அது புராணம். பரம்பொருளுக்கு இயற்கை பணிகிறது என்றெல்லாம் புரிந்து கொள்ளத் தெரிந்த நாம் ஏன் நம் காலத்தில் இருந்த ஸ்ரீஅரவிந்தர் சொன்னால் மட்டும் ஏளனமாய் நினைக்கிறோம்.? 

பூம்பாவை உயிர்தெழப் பண்ணியது இயற்கை நிகழ்வா? இன்னும் எவ்வளவு அடுக்கலாம், சாக்தம், சைவம், வைணவம் என்று வித்யாசமின்றி. 

சரி இங்குதான் இப்படி என்றால் மற்ற மதங்களிலும் எவ்வளவு இருக்கிறது இது போல்? 

யோகிகள் எல்லாம் பொய் சொன்னார்களா? சித்தர்கள் எல்லாம் செய்தது சும்மா பம்மாத்தா? உலகின் பல மூலைகளில் பல காலங்களில் இருந்த மகான்கள் பலரும் அதீதமான நிகழ்வுகளை நிகழ்த்திக் காட்டவில்லையா? 

உண்டுதான். அதற்காக எந்த யோகி வந்து என்ன சொன்னாலும், எந்த அருளாளர் வந்து என்ன சொன்னாலும் 'அது எல்லாம் உண்மையாக இருக்கும். நாம் யார் அதை எல்லாம் கேள்வி கேட்பதற்கு? கேலி பேசுவதற்கு?' என்ற சிந்தனை வளர்ந்தால் என்ன ஆகும்? 

நம் காலத்திலேயே ஒருத்தன் பக்தர்களைத் தவக்களை மாதிரி குதிக்க வைக்கிறான் பப்ளிக்கில். கேட்டால் குண்டலினியை எழுப்புகிறேன் என்கிறான். இதெல்லாம் சுத்தப் புரட்டு என்று எப்படிச் சொல்வீர்கள்? 

நீங்கள் இது உங்கள் நம்பிக்கை என்றால், அவர்கள் அது தங்கள் நம்பிக்கை என்பார்கள். ஆக மொத்தம் நாளாவட்டத்தில் உண்மை பொய் என்பது மத விஷயங்களில் கண்டு பிடிக்காமல் போய், நியாய் உணர்வுகள் மழுங்கிப் போக, என்ன செய்தாலும் மதப் போர்வையில் தப்பித்துக் கொள்ள்லாம் என்ற நிலை உருவாகி மக்கள் வெறும் லோகாயதர்களாகவும், யாராவது சர்வாதிகாரி வந்தால் அவனுக்குப் பணியும் ஆட்டுமந்தைக் கூட்டமாகவும் அன்றோ ஆகிவ்டும்? 

அப்பொழுது மட்டும் ஹா ஹா அறிவின் கம்பீரம் என்னாவது? மனிதனுக்கு அறிவு வேண்டாமா? மனசாட்சி இல்லையா? நல்லது எது கெட்டது எது என்ற விவேகம் வேண்டாமா? என்று பொங்கிப் பொங்கி ஆளுக்காள் எழுதினால் என்ன பயன்? (அந்த நிலையில் எழுதுவதற்காகவாவது ஆள் மிஞ்சுமா?) விஷமரத்தை நாமே நம் கையால் போற்றி போற்றி வளர்த்துவிட்டு பின்னர் அதன் பயனுக்கு மட்டும் அலறினால் கர்மம் விட்டுவிடுமா? 

***



>>ரொம்ப நோண்டக்கூடாது<<<<<<< 

இந்த அறிவுரையை நீங்கள் கேட்டிருக்கலாம். 


ரொம்ப நோண்டினாங்களே! 

நம்மை மாதிரி இல்லாம இன்னும் தீவிரமாகவே நோண்டினாங்களே. 

எப்போன்னு கேட்கிறீங்களா? 

பழங்காலத்தில் முனிவர்களும் ரிஷிகளும் நம்மைவிட இன்னும் கறாராகவே நோண்டினாங்க. 

மதம் என்னும் துறையில் ஏகப்பட்ட புளுகுகளும், தகிடுதத்தங்களும் அதிகமாகவே, இந்த யோக சக்தி, சித்திகள், அதீத ஆற்றல்கள், அறிவுக்குப் பொருந்தாத இயற்கையில் இயலாத அற்புத நிகழ்வுகள் பற்றியெல்லாம் நோண்டி என்ன முடிவு என்று வந்தார்களே. 

இன்னிக்கு இருப்பதைப் போலவேதான் அன்னிக்கும் இருந்திருக்கும் போல இருக்கு. 

சும்மா யோகத் திறமை, குண்டலினி, அந்தச் சக்கிரம், இந்தச் சக்கிரம், அந்தரத்துல பறந்தேன், ஆகாசத்துல போனேன்னு அள்ளிவிட்ட கதைகளையெல்லாம் என்ன யோக்யதை என்று அலசி ஆய்ந்துதானே பாதராயணராகிய வேத வியாசர் ஸ்ரீபிரம்ம சூத்திரங்கள் என்னும் வேதாந்த நெறியை நிறுவியதே. 

அன்றிலிருந்து பல நூற்றாண்டுகள் வேதாந்தத்திற்கு முரண்படாமல் இருந்தால்தான் எதுவுமே மதத் துறையில் ஒப்புக்கொள்ளப்படும் என்ற நிலைமை இருந்த வரையில் இந்தப் பம்மாத்துகளும், அக்கப்போர் அதிசய உடான்ஸுகளும், வாமிட் வருகின்ற அளவிற்குக் குமட்டுகின்ற அருவருப்புடன் கூடிய யோக சக்தி ஆரூட சஞ்சாரங்களும் அவ்வவற்றின் யோக்கியதை என்ன என்று வேதாந்தம் விளக்கி வைக்கவும் மதம் என்னும் துறை அறிவு என்பதனோடு முரண்படாத நுண்கருத்தியல் மெய்ப்பொருள் தெளிதல் என்ற நிலைமை சிறந்து விளங்கியதே. 

எனவே நோண்டத் தொடங்கியது நானன்று. ஸ்ரீ பகவத்பாத ஆதிசங்கர், அவருக்கும் முன்னிருந்த கௌடபாதாச்சாரியார், அவர்களிலிருந்து, ஸ்ரீராமானுஜர், ஆழ்வார்கள் என்றபடி அனைத்து வேதாந்திகளும் ஒப்ப முடிந்த முடிவாகக் கைக்கொண்ட நியதிகளை வைத்துத்தான் இந்த மாதிரி பயஸ் கோமாளித்தனத்தையும், ஆடு தலையாட்டும் நம்பிக்கைத் தனத்தையும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறேன். 

நோண்டக் கூடாது என்று நீங்கள் எனக்குச் சொல்லவில்லை ஐயா! வேதாந்த தர்சன ஆசாரியர்களான ஸ்ரீஆதிசங்கரர், ஸ்ரீராமானுஜர் இன்னும் மகத்தான வேதாந்திகள் அனைவருக்கும் நீங்கள் நோண்டாதீர்கள் என்று சொல்கிறீர்களா? 

வேதாந்த முரசு ஒலித்தால் போதும். புளுகு மூட்டைகளும், பொய்ப்பசப்பு ஆன்மிக மழுமழுப்புகளும் பற்றி எரியுமே! 

***


   
ஓராளு சர்வாதிகாரி. மனிதர்கள் அனைவரும் மனத்தைக் கொன்றுவிட்டு, தான் பேசும் கூட்டத்தில் வித்யாசங்களே அற்ற மொத்த முண்டங்களாய் அமர்ந்து கேட்க வேண்டும். அதுதான் தான் காட்டப் போகும் லட்சிய உலகின் பயிற்சி என்கிறான். 

இன்னோராளு உலகின் பெருத்த கண்டங்கள் யுத்தத்தில் மோதும் போது, ஒரு மிருகத்தினும் இழிந்த வன்முறைக் கோமாளியைத் தான் தான் உள்ளே புகுந்து யோக சக்தியால் அடக்கினேன் என்கிறான். 

மற்றோராளோ என்னதுக்கு யோக சக்தி. நேரேயே போய் ஆளைக் கண்டுவிட்டு கூட்டு வச்சுக்கப் பார்க்கிறேன் என்று போகிறான். 

இதில் முதல்ல சொன்ன ஆளுக்குப் பரிந்து பேச யாரும் இப்ப முனைய மாட்டாங்கன்னு நினைக்கிறேன். 

அதுக்கு முனைகிற அசடுகளும் உலகில் இருக்கு. அதாவது அப்படியெல்லாம் ஒன்றும் கொடுமை நடக்கவே இல்லை. எல்லாம் கட்டுக் கதை. ஹிட்லர் சமத்து சக்கரைக் குட்டி. அவர் பாட்டுக்கு ஜர்மனியை உயர்த்தணும்னு பாடுபட்டாரு அவ்வளவுதான். அப்படீன்னு நடந்ததையெல்லாம் எப்படி மறுத்துப் பேசலாம்னு சால்ஜாப்பு, மழுப்பல் பண்ணித் திரிகிற கூட்டம். (இந்த முயற்சிக்குப் பேர்தான் Negationism) 

ஆய்வாளர்களாலும், அறிவுலகத்தாலும் ஐயம் திரிபற அந்தப் பைத்தியக்காரனைப்பற்றி விண்டு விளக்கி வைக்கப் பட்டதாலேயும், மக்கள் விழித்துக் கொண்டுவிட்ட காரணத்தாலேயும் பூசி மொழுகல் ஜம்பம் சாயாததுனால ஹிட்லர் ஹிட்லர்தான். 

அவனை அப்படியே உணர்ச்சி பூர்வமாக ஏற்று அவன் பின்னால் சென்றுவிட்டு, அவன் மறைவுக்குப் பின்னர், மயக்கம் கலைய, ஐயோ என்ன கொடுமைகளை சித்தாந்த கிறக்கத்தில் செய்துவிட்டோம் என்று மனம் கவல்கின்ற ஜர்மானிய மனசாட்சி ஒரு பக்கம். 

சரி இந்தப் பைத்தியக்கார பஜனை இத்தோடு நிற்கட்டும். இதை ஏன் ஆரம்பித்தேன் என்பதற்குக் காரணம் உண்டு. 

ஒட்டுமொத்தத்துல இந்தப் பேயரசுக்கு இலக்கே மனித ஜீவனின் சுதந்திர உணர்ச்சி. 

தான் ஓர் ஆளுன்னு மனிதன் நினைக்கக் கூடாது. 

'நானில்லை. அவன் வரமாட்டான். நம்பாதே' என்ற நடமாடும் பிணங்களாய் மனித சமூகம் ஆவதுதான் இந்த ஃப்யூரர் ஓவென்று ஊரெல்லாம் கேட்கும்படியாக அலறிய நோக்கம். 

சரி. இந்த ஆளு சொல்றதுக்கும், நம் காலத்துல ஜேகேன்னு ஓராளு, அதான் அந்த ஜிட்டு கிட்டு தான், அவர் சொன்னதுக்கும் என்ன வித்யாசம்? 

நான் ஆ? பேசாத. நீ யாரு உண்மையில. என்னிக்கு உனக்கு இந்த நான் என்கிறதே போகிறதோ அன்னிக்குத்தான் உண்மையை உணர முடியும். 

இந்தத் 'தான்' என்பது என்ன? 

Thought is the gap between the preceding thought and the succeeding thought. 

இந்தப் பேச்சு அவர் பேசும் போதுதான் வசந்த விஹார்ல, 'சரி சரி எனக்கு ஜோலி இருக்கு. நான் கிளம்பறேன்னு' எழுந்துவந்துட்டேன். 

அதிமானச மகாசக்தி வந்து இறங்கணும். 

ஏ 'நானே' நீ முதல்ல இடத்தைக் காலி பண்ணு 

என்கிறார் ஸ்ரீஅரவிந்தர். 

அரவிந்தர் என்ன சொன்னாரு? ஹிட்லர் என்ன பேசினாரு? ஜே கே என்ன ஆங்கிலத்துல மொழிந்தாரு? அப்படீன்னு பார்த்தா எல்லாம் ஒரே இடத்தை நோக்கித்தான் போவுது. 

நான் அப்படின்னு ஓர் ஆளு இந்த மனுசாளுக்குள்ள உட்கார்ந்துகிட்டு, இந்தப் பெரிய மனுசாளுக்கெல்லாம் ரொம்பவே கடுப்பேத்துறான். 

அதான் இவிங்க பல குரல்ல, பல மொழியில அட்டாக் பண்றதெல்லாம் இந்த 'நான்' ஐ. 

ஆனால் ஹிட்லரு பௌதிக ரீதியாக அதைச் செய்து காண்பித்ததால் முட்டாள்தனமும், மூர்க்கத்தனமும் கொடூரமுமாக இன வெறுப்பின் அஜண்டாவாக ஆகிப் பல்லிளித்தது. 

மத்தவங்க சொன்னது ஆன்மிகத் தளம். அதுனால 'முதல்ல இதையெல்லாம் ஒட்டுக்க சேர்த்து ஒரு மூட்டையா கட்டினதே தப்பு' என்று சிலர் சொல்றதுலயும் ஒரு பாயிண்ட் இருக்கு. 

சரி ஆன்மிக தளம்னு எடுத்துக்கிட்டாலும் அதுக்குன்னு யோக சக்தி மாயமந்திரம் என்றால் என்ன அர்த்தம்? அதுக்கும் பதில் சொல்ராங்க. 

நோண்டறதா இருந்தா ஆதிலேந்து நோண்டு. அந்தக் கதையெல்லாம் சரிதான் என்றால் எங்க அரவிந்தர் சொன்னது மட்டும் தப்பா? எதுலயும் லாஜிக் வேனுமில்ல? 

பழங்காலத்துல பார்த்தா வேதாந்திகள் இந்த விஷயத்தையெல்லாம் தீவிரமாகவே யோசித்து எது மெய் எது பொய் அறிவின் பிரமாணங்களில் எதுக்கு எவ்வளவு யோக்கியதை? என்று epistemological categorization and gradation பண்ணி வைத்திருக்கிறார்கள். 

சரி அந்த வேதாந்திகள் வாழ்க்கையிலாவது இந்த மாதிரி அதீத நிகழ்வுகள் சொல்லாம இருக்காங்களான்னு பார்த்தா, ம் ம் அங்கனயும் இந்தக் கதைகள் வருது. ஆனால் அந்த நிகழ்வுகளை அடிப்படையா வைத்து அந்த வேதாந்திகள் தங்கள் கருத்துகளை வளர்த்தெடுத்திருக்காங்களான்னு பார்த்தா..ம்ஹும் தடயமே இல்லை. 

ஆனால் என்ன ஒன்று நாம் தான் இந்த விசாரத்துல தலையைப் பிச்சிக்கிறோம்னு இல்ல, அவங்களே அந்தக் காலத்துல இந்த மாதிரி விசாரப் பட்டிருக்காங்க என்பது ஆச்சரியம்தான். நமக்குச் சந்தோஷமும் கூட. 

அதாவது பொதுமக்களுக்கு அந்தக் காலத்துல இருந்த பல பல நம்பிக்கைகளைக் குலைக்காமலேயே பெரியவங்க வித்வான்களுக்குன்னு வரும் போது விசாரத்தைத் தயவு தாட்சண்யம் அற்ற நுண்கருத்தியல் ஆழ்சிந்தனைத் துறையாக ஆக்கி வைச்சிருக்காங்க. 

அதாவது ஏதாவது நம்பிக்கையைக் கைக்கொண்டு தங்கள் வாழ்க்கைக்கு ஓர் ஆதுரத்தை நாடும் பொதுமக்களுக்கு அவர்களின் ஈடுபாட்டிற்குத் தகுந்தாற்போல் புராணங்கள், அதீத நிகழ்வுக் கதைகள், அதாவது 'எதுவும் சாத்தியம் பயப்படாதே நம்பிக்கை கொள்' என்ற செய்திப் போய்ச் சேரும் படியாக. 

அதுவே யாராவது கண்டிப்பா கறாரா தீரத் தெளிய எது உண்மைன்னு விசாரம் பண்ணுவேன்னா அவங்களுக்கு வித்வான்களின் கடும் அறிவு நெறிக் கோட்பாடுகளால் ஆன விசார மார்க்கம், இப்படி ஒரு பலமுக ஆன்மிகக் கல்வி அந்தக் காலத்திலிருந்து வந்து கொண்டிருக்கிறது என்பதும் உண்மைதான். 

ஆனால் அதையெல்லாம் காரணம் காட்டி இன்னிக்கு கார்ப்பரேட் குண்டலினிச் சாமியார்கள் தாங்க திரிச்சு விட்றதும் சுத்தமான அக்மார்க் சமாச்சாரம்தான் என்றால் என்ன பண்ணுவது? 

இன்னொன்று. வேதாந்த நெறிதான் வித்வான்கள் உகந்தது. வியாசர் தொடங்கி ஸ்ரீஆதிசங்கரர், ஸ்ரீராமானுஜர் போன்ற பெரும் வேதாந்திகள் எல்லாம் உகந்தது; உண்மையில் அதுதான் மதம் என்பதே. மற்றவை எல்லாம் சும்மா ஒளா ஒளா என்றால் அப்பொழுதும் ஒரு கேள்வி எழுகிறது. 

இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகள் பண்டைக் காலத்துலதான்னு இல்லை; நம்மில் சிலர் பலர் வாழ்விலும் கூட ஏற்பட்டிருக்கலாம். 

அதாவது அறிவினால் சிறிதும் விளக்க முடியாத ஆனால் உண்மை நிகழ்வுகள் நடந்திருக்கலாம். 

நாம் யாரும் எந்த மடத்துக்கும் தலைவர் கிடையாது. எந்தப் புகழ், பணம், படாடோபமும் இல்லாத நம் அன்றாடச் சூழலிலேயே அறிவின் நிரூபிக்கப்பட்ட வழிமுறைகளுக்கு அடங்காத அதீத நிகழ்வுகள் இன்று மட்டுமன்று எவ்வளவோ காலமாக எத்தனையோ இடங்கள் உலகம் முழுதும் நட்ந்ததாகச் சொல்லப்படுகின்றன. 

நம்மிலும் பலரைத் தனியாகக் கேட்டால் 'ஆமாம் சார், ஒரு நிகழ்ச்சி பாருங்க. இப்பவும் எனக்கு எப்படீன்னு புரிஞ்சிக்க முடியலை. நீங்க நம்புவீங்களோ மாட்டீங்களோ, எனக்கு நடந்ததுனால என்னால இல்லைன்னு சொல்ல முடியலை' என்று சொல்லும் நிகழ்வுகள் உண்டுதானே! 

அப்படியென்றால் இந்த மாதிரி நிகழ்வுகளை எப்படி விளக்குவது? எப்படிப் புரிந்து கொள்வது? இந்த மாதிரி நிகழ்வுகளைக் கண்டுகொள்ளாமலேயே நம் நுண்மாண் நுழைபுலம் மிக்க அறிவுத் தன்மை எத்தனை நாள் காணாக்கண் இட்டிருக்க முடியும்? 

கொஞ்சம் தெளிவா குழப்பிட்டேனோ? 

*** 


ஏன் மற்றவரைச் சொல்ல வேண்டும்? ஏற்கனவே ஒரு குருவிக்கும் எனக்கும் நடந்த என்கவுண்டர் பற்றி எழுதியிருக்கிறேன். 


என்னய்யா பெரிய விஷயம்? குருவி ஒன்று தன் குஞ்சு கீழே விழுதுவிட்டது என்னும் போது வழிமறித்தது. அவ்வளவுதானே. என்ற பதில் வரலாம். 

ஆனால் ஒரு சின்ன பறவை முன்பின் பழகியறியாத மனிதனிடம் தன் குஞ்சுக்காகக் காலின் முன் அரைவட்டம் அடித்தபடி மறிக்குமானால், நான் கற்ற அறிவியல் அங்கு எனக்கு அதனை விளக்கவில்லை. 

The problem is it is trying to communicate in urgency. 

அதை நான் மீறி ஒரு பேப்பரைச் சுருட்டி அப்புறம் தள்ளிவிட்டுப் போய்விட முடியும். 

அதன் முன்னால் நான் பூதாகாரமான மிருகம். 

அதுவும் மிருக நியதிகள் எல்லாம் வைத்து அதனால் அனிச்சை உணர்வால் கணிக்க முடியாத மனிதன். 

என்னிடம் வந்து அது ஏதோ தெரிவிக்க விழைவதே என்னால் புரிந்து கொள்ளக் கஷ்டமாக இருக்கிறது. 

நான் என்னை மனிதன் என்றும் அதனைச் சிறு புள் என்றும் வகைப் படுத்தி உணர்ந்தால் போல் அது என்னையும் தன்னையும் வகைப் படுத்தி உண்ர என்ன வாய்ப்பு? முதலில் அவ்வளவு தகவலகளை ப்ராஸஸ் பண்ண ஏது அங்கு மூளைப் பொருள்? 

ஆனால் என் புரிதலின்படி அது என்னை நிலைமையை உணர்ந்து திரும்பிப் போகும்படி செய்துவிட்டது. இத்தனைக்கும் வளர்க்கும் பறவையும் அன்று. 

அதற்கு நாங்கள் செய்த ஒரே நல்லது அதன் கூட்டைக் கலைக்காமல் இருந்ததுதான். 

மற்ற சில நிகழ்வுகள் அதீதம் என்று வகைபடுத்த வேண்டியது சிலது உண்டு எனினும் நான் சாதாரணமாகத் தோன்றும் இதனையே உதாரணமாக எடுத்துக் கொள்கிறேன். 

ஒரு குருவியினால் அதனினும் பன்மடங்கு வடிவம் கொண்ட ஒரு மனிதனிடம் தன் துடிப்பு சிறகு அசைவுகள் ஆகியவற்றின் மூலம், அவன் உள்ளத்தில் 'இது நம்மை மீண்டும் உள்ளே சென்று விடுமாறு வேண்டுகிறது. நாம் எடுக்கப் போகும் சைகிளின் ஹாண்டில் பாரில்தான் கூட்டிலிருந்து கீழே விழுந்த அதன் குஞ்சு ஒட்டிக் கொண்டிருக்கிறது. அது பறந்தபின்னர் எடுத்துக்கொள்ளலாம்' என்று நான் புரிந்து கொள்ளும் வகையில் ஒரு குருவி தகவல் பரிமாறுகிறது. 

நானறிந்த தகவல் பரிமாற்ற முறைகள் எதுவும் அங்கு செல்லுபடியாகவில்லை. அந்த மொழியும் எனக்குத் தெரியாத மொழி. அப்பொழுது அந்தக் கணத்தில் எந்த syntax மூலம் நான் அந்த மெஸேஜைப் புரிந்து கொண்டேன்? 

அப்படியொரு சிறு குருவி முறையல்லா முறையில் அதாவது நானறியா முறையில் நேரடியாக என் உள்ளத்திற்குத் தெரிவிக்கும் என்றால், ஏன் ஒரு யோகி தன் தீவிர உள்ளப் பயிற்சியால் மற்ற ஒரு கொடூரனின் உள்ளத்தோடு நேரடித் தொடர்பு கொண்டிருக்க முடியாது? 

இந்தக் கேள்வி கேட்டதாலேயே அறிவுலகம் என்னைப் பகிஷ்கரிக்கும் என்றால் அப்பொழுது அறிவுலகத்திற்கென்று சில மத நம்பிக்கைகள் உள்ளனவா? 

ஆனால் இந்தக் கேள்வியை அனுமதித்தால் என்ன அபாயம் என்பதையும் நான் அறிவேன்? 

யார் வேண்டுமானாலும் வேஷதாரிகள், ஏமாற்று வேலைக் காரர்கள் யோக சக்தி என்று சொல்லி விடும் புளுகுகளை எப்படிப் பிரித்தறிவது? விமரிசிப்பது? 

யாராவது நான் தான் என் யோக சக்தியால் வர இருந்த அரிக்கேனைத் தடுத்து நிறுத்தினேன் என்றால் அதை மறுக்க அடிப்படை என்ன? 

அதாவது அதீத நிகழ்வுகள் என்பன சுத்தமாக இல்லவே இல்லை என்று சொல்ல முடியுமா? இதற்கு அவரவர் மனசாட்சி பொதுவாகத் தாம் சந்தித்த நிகழ்ச்சிகளே தடயங்கள். 

ஆனால் அவை தடயங்களே ஒழிய அந்தத் தடயங்களை வைத்து எப்படிப் புரிந்துகொள்வது? அவற்றை எந்த பிரமாணங்கள் கொண்டு நிச்சயப் படுத்திக் கொள்வது? 

அப்பொழுது அங்கும் அறிவியல் அணுகுமுறைகள்தாம் நமக்கு அந்த மாதிரியான நிகழ்வுகளின் வாஸ்தவங்களை ஆய்வு அடிப்படைகளாகக் கொண்டு விளக்கங்கள் தரமுடியும். இல்லையெனில் உண்மை எது போலி எது என்ற வேறுபாடு இல்லாமல் பொய்களின் பண்ணையாகிவிடும். 

***  



ஒரு குருவிக் கதைக்கும் அரவிந்தர் சொன்னதுக்கும் என்ன சம்பந்தம்? குருவி நிகழ்ச்சி ஒரு சின்ன கம்யூனிகேஷன். அவ்வளவுதான் என்று இதைத் தள்ளுபடி செய்தாலும் செய்யலாம். நான் செய்தது ஒரு வேளை அரவிந்தர் சொன்னதுக்கு credibilityக்கான சாத்தியம் இப்படிச் சொல்லிப் பார்த்தா இருக்குமோன்னு முயற்சி பண்ணினேன். அதற்குமேல் இந்த யோசனைக்குப் பொருள் இல்லை என்பது சரியே. 


அதாவது Reality is not flexible. 


*** 


யோகம் என்பது சிறந்ததில்லையா? வேதாந்தம் சிலருக்கு விளங்கலாம். அதற்குப் போதிய திறமை இல்லாதவர்கள் அதற்கான மனப் பயிற்சி அடைய என்பதற்காவது யோகம் முக்கியமானது அல்லவா? என்ற கேள்வி எழக்கூடும். 

யோகம் என்பது ஒரு நல்ல சிறந்த துணை நெறி என்பதை அனைவரும் ஏற்கின்றனர். 

ஆனால் அதற்கென்று Independent epistemological status கிடையாது என்பதுதான் வேதாந்திகளின் முடிபு. 

I think you will be able to appreciate the golden difference between Yoga as an aid and a utility and Yoga as an epistemic valid approach. 


வேதாந்தம் என்பதை அளவுகோலாகக் கொண்டு மதத்துறையில் நெறிப்படுத்திக் கொள்ளுதல் என்பது கிட்டத்தட்ட கடந்த ஈராயிரமாண்டுகளாக ஆகம வேதாந்த சமரஸம், சித்தாந்த வேதாந்த சமரஸம் என்ற முறையில் நடந்து வருவதைக் காணலாம். 

கல்வி கற்றவர், கல்லாதவர் என்ற பாகுபாடின்றி அனைத்து மக்களுக்கும் சென்று சேர வேதாந்தக் கருத்துகளைக் கொண்டு சென்ற மக்கள் இயக்கம் தான் புராணம் போன்ற முயற்சிகள் எல்லாம். 

ஆகமங்கள் பிரதேச பாஷைகளுக்குப் பெரும் முக்கியத்துவம் அளித்து பொது ஜன மதக் கல்வியைப் பெரும் அளவு முன்னெடுத்துச் சென்றுள்ளது. 

அரவிந்தர் யோகத்தில் பெரும் அதாரிடியா? அவர் சொன்னதை வைத்துக்கொண்டு யோகத்தைக் கணக்கிடலாமா? நியாயம்தான். ஆனால் ஸ்ரீஅரவிந்தரைப் பொறுத்த வரையில் நான் மிகவும் ஜாக்கிரதையாகப் பேச வேண்டியவனாய் இருக்கிறேன். காரணம் யோகத்தில் அவருடைய சான்றாண்மையைக் குறைத்து மதிப்பிட என்னால் இயலாது. 

முதலில் அந்தத் துறையில் அதற்கான யோக்கியதை எனக்குக் கிடையாது. மேலும் அவருடைய ஆய்வுகள் வேதப் புலத்தில், நான் கண்டு வியப்பவை. சாவித்ரி படைப்பு, லைஃப் டிவைன், மற்ற இலக்கிய ஆக்கங்கள் பிரமிப்பூட்டுபவை. 


*** 


ஸ்ரீ அரவிந்தரையும், அன்னையையும் பற்றிக் கூறியதற்குப் பலர் கோபமுறலாம். 

நாம் ஏன் கற்பனையாகச் சொல்லப் போகிறோம்? எதை அவர்களைச் சேர்ந்தவர்களே பதிவு செய்திருக்கிறார்களோ அதை வைத்துத்தான் பேச்சு. இதோ அரவிந்தர் சொன்னதிலிருந்து, அன்னை யோக சக்தியால் கொசு விரட்டினார் என்பதற்கெல்லாம் சுட்டி. கொசு மேட்டரை மட்டும் காபி பேஸ்டில் போட்டிருக்கிறேன். அதுவும் சுட்டியில் கிடைப்பதுதான். 

நோண்டாதே நோண்டாதே என்று அலறுகிறார்கள். நாம் ஏனய்ய நோண்ட வேண்டும்? அதான் வெளிப்படையாக உள்ளதே. 

உள்ளதைச் சொன்னால்.......


Another evening Dr. Manilal asked the Mother whether it was a sin to kill bugs, mosquitoes, scorpions and the like. She answered that in her early Pondicherry days, she used to drive mosquitoes away by her yogic force, but Sri Aurobindo didn't approve of it. On this Sri Aurobindo commented jokingly, "Because you were making friendship with them." 23 While Dr. Manilal presented the extreme Jain viewpoint on Ahimsa, the Mother said: "In order to be a true non-killing Jain, one must be a Yogi. Then one can deal rightly with these animals and insects." 24




***



இது On the Mother என்ற நூலில் 28ஆவது அத்யாயத்தில் Asuric forces என்பதில் வருவது. நூலை எழுதியவர் பழுத்த அரவிந்த பக்தர், K R Srinivasa Iyengar 

***


போகட்டும். ஏதோ ஹிட்லர் உள்ளத்துக்குள்ள போய் அசுர சக்தியை விரட்டினாரு ஸ்ரீமான் அரொபிந்தொ கோஷ். 

அன்னை அந்த இண்டர்நேஷனல் அப்ளிகேஷனுக்குக் கொஞ்சம் டொமஸ்டிக் வடிவம் தந்தாங்க, கொசுக்களை விரட்டி. 



With her uncanny occult powers, the Mother could see - as she was to explain many years later - how Hitler was indeed under the domination of an evil Force or nefarious being that dazzled and led him on and on, 

seemingly from one sensational victory to another and still another:

Hitler used to retire into solitude and remain there as long as it was necessary to come into contact with his "guide" and receive from him :inspirations which he carried out later very faithfully. This being which Hitler took for the Supreme was quite plainly an Asura, one who is called the "Lord of Falsehood" in occultism, but who proclaimed himself the "Lord of the Nations" .... Generally he used to appear to Hitler wearing a silver cuirass and helmet; a kind of flame came out of his head and there was an atmosphere of dazzling light around him .... He used to tell Hitler everything that had to be done - he played with him as with a monkey or a mouse. He had decided clearly to make Hitler commit all possible extravagances till the day he would break his neck, which did happen. 6

விஷயம் அத்தோடு விட்டதா? 

அப்படித் தாங்கள் செய்த யோக மண்டலப் போர்களுக்குக் கடுப்பாகிப் போய் அந்த அசுர சக்திகள் என்ன செய்தனவாம் பதிலுக்கு...! 

அவை குறிபார்த்துக் கொண்டே இருந்தனவாம், எப்படா இவங்களைப் பழி வாங்கலாம்னு. 

பார்த்தா சான்ஸே கிடைக்கலை. 

ஒரு நாள் அரவிந்தர் நடந்து வராரு, புலித் தோல் தடுக்கிப் பாவம் கீழே விழுந்துட்டாரு. 

ஏதோ மத்தவங்க விழுந்தா ஜஸ்ட் ஸ்லிப்பு. சாதாரண மக்களுக்கு தடுக்கி விட்டா அதுக்குப் பெரிய காரணம் கிடையாது. 

ஆனால் உலக நாடுகளின் போர்களுக்கிடையே தம் யோக சக்தியால் உள்ளே போய் அதுவும் ஹிட்லர் ராக்ஷஸன் அவன் உள்ளத்துக்குள்ளேயே பூந்து அவனோட முடிவ மாத்தறதுன்னா, அப்படிச் செஞ்சதுக்குப் பலனாகத்தானே இந்த மாதிரி தடுக்கி விழறதெல்லாம் இருக்கணும். 

இவரால விரட்டப்பட்ட அசுர சக்திகள் எப்படி பழி தீர்த்துக் கொண்டன என்கிறார் ஸ்ரீ அரொபிந்தொ கோஷ்? 

அந்த அசுர சக்திகள் அன்னையைத்தான் குறி வச்சுதாம், அன்னையைத் தாம் காப்பாத்தணும்னு குறிப்பா இருந்தாரேகண்டி தம்மைக் காப்பாத்திக்கணும்னு உஷாரா இருக்க விட்டுப் போச்சாம். அதுனால அந்த அசுர சக்திகள் கேப்புல பூந்து அடிச்சுடுத்தாம். எப்படி? 
புலித்தோல்ல தடுக்கி விழும்படி பண்ணி. 


While the strict outer explanation of the accident was that Sri Aurobindo stumbled while walking, the timing of the fall and the seriousness of the fracture hinted at some occult intervention. 14 The Hitler-peril, although halted for the nonce by the Munich Agreement, was far from being exorcised away and the real trial of strength between the forces of Light and Darkness was still to come. The world was very near the brink, it was almost touch and go. But in their anxiety for the world's welfare, Sri Aurobindo and the Mother were perhaps a little careless of themselves and the hostile forces suddenly struck.15 Sri Aurobindo himself explained thus the cause of his accident: "The hostile forces had tried many times to prevent things like the darshan but I had succeeded in warding off all their attacks. At the time the accident to my leg occurred, I was more occupied with guarding the Mother and I forgot about myself. I didn't think the hostiles would attack me. That was my mistake." 16 The Mother was asleep - and all was quiet, the hostile forces were able to slip through and cause his fall. In Nirodbaran's words:

இதுல ஒன்றைக் கவனிக்கணும். 

ஸ்ரீ அரவிந்தரோட கல்வி எவ்வளவு! ஆங்கிலம், சம்ஸ்க்ருதம், கிரேக்கம், லத்தீன் எனத் தெரிந்த மொழிகளின் ஆட்சியே பயங்கரம்.! 

அவருடைய வேத ஆய்வுகள், இலக்கிய படைப்புகள் எல்லாம் கண்டு எனக்கு வியப்புதான். 

ஆனால் இப்படிப் பட்டவர் புலித்தோல் தடுக்கி விட்ட ராக்ஷஸ அபாயம் பத்திச் சொல்லும் போது, நானெல்லாம் சாதாரண மனுஷாள்தானே அதுனால சிரிக்கத்தான் முடியுது. 

அது சரி. On the Mother என்னும் இந்த நூலை எழுதிய ஸ்ரீ K R Srinivasa Iyengar உம் சாதாரணமானவரா? Indian English Literature என்னும் புதிய துறையான இந்திய ஆங்கில இலக்கியத் துறைக்கே முக்கியமான ஆள். 
அவர் எழுதின அரவிந்தர் வாழ்க்கை வரலாற்றிற்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. அது அரவிந்தர் காலத்துலேயே அரவிந்தரே பார்த்து ஒப்புதல் அளித்தது. அவரு அன்னையைப் பத்தி எழுதினதுல வரதை வைத்துக் கொண்டுதான் இப்பொழுது பேசுகிறோமேகண்டி எவனோ எழுதி வைத்தவைகளைக் கொண்டு அல்ல. 

சுட்டி இதை நன்றாகப் பாருங்கள் --- 
கொடுமையானது அருளாளர் என்று சொல்லிக் கொள்வோர் மனிதரின் அறிவைக் கேவலப் படுத்தி நட்ந்து கொள்வது. அது எந்த அருளாளராக வேண்டுமானாலும் இருக்கட்டும். 

ஹிட்லருக்குள்ள ஓர் ஆவி இருந்தது. அதை இங்கிருந்த படியே பார்த்தவங்க என்ன பண்ணாங்க? அந்த ஆவி அப்பப்ப பாண்டிச்சேரிக்கும் வருமாம் வேவு பார்க்கறதுக்கு. அந்த நேரமா பார்த்து இவங்க என்ன பண்ணாங்க தெரியுமா? அந்த் ஆவி மாதிரி உருவம் தாங்கிண்டு நேர போய் ஹிட்லர்கிட்ட இங்க படையெடுக்காத; அங்க போய் படையெடு - அப்படீன்னு சொல்லிட்டு வந்துட்டாங்க. திருப்பி வாராய்ல பார்த்தா எதிர்க்காப்பல அந்த் ஆவி வருது. அடே தன்னை மாதிரியே ஒண்ணு எதிரே வருதே என்னவா இருக்கும்னு பேஜாரா ஆகிப்போய் ......

ஓய் சிரிக்காதீங்கப்பா...நானா சொல்லுதேனா? தோ இங்கன இருக்குல்லா....

Mother and Sri Aurobindo participated in the affairs of the earth and the universe according to the mission and the work they were doing. When it was clear that the Second World War was inevitable, they saw the Lord of Nations leading Hitler on and urging him to conquer the world with very tall promises. The Lord of Nations, it was said, appeared before Hitler in a dazzling light in shining white armour and gave him detailed advice. Sri Aurobindo called this war, "Mother's war." He used to send his spiritual force in support of the Allies and eagerly awaited the results of individual battles. At every important turning point of the war, Sri Aurobindo took great interest. At the famous Dunkirk battle where the British troops were miraculously saved, it was reported that the fog in the atmosphere served the British navy well. Sri Aurobindo used to refer to that with a smile as the 'mysterious fog'. 
When Hitler was gaining success after success and Mother was trying in the opposite direction, she said the shining being who was guiding Hitler used to come to the Ashram from time to time to see what was happening. Things changed from bad to worse. Mother decided on a fresh strategy. She took on the appearance of that shining being, appeared before Hitler and advised him to attack Russia. On her way back to the Ashram, she met that being. The being was intrigued by Mother having stolen a march over him. Hitler's attack on Russia ensured his downfall.
 Mother came to know of her previous births on several occasions. In past lives Mother was Queen Elizabeth of England, Catherine of Russia, Joan of Arc, an Egyptian Queen, and the mother of Moses, among others. In France, she once visited the palace of Louis XIV. A portrait attracted her and she realised that it was herself. She recollected several other details of that life. In a museum Mother came across a special comb used by an Egyptian Queen. Mother recognised it as one she had used.
 She had live contacts with several gods. Durga used to come to Mother's meditations regularly. Particularly during the Durga Puja when Mother gave Darshan, Durga used to come a day in advance. On one occasion, Mother explained to Durga the significance of surrender to the Supreme. Durga said because she herself was a goddess, it never struck her that she should surrender to a higher power. Mother showed Durga the progress she could make by surrendering to the Supreme. Durga was agreeable and offered her surrender to the Divine.
 Mother saw in her meditation some Chinese people had reached Calcutta and recognised the danger of that warning. Using her occult divine power, she removed the danger from the subtle realms. Much later when the Chinese army was edging closer to India's border, a shocked India did not know which way to turn. The Chinese decided on their own to withdraw, much to the world's surprise. Mother had prevented them from advancing against India by cancelling their  power in the subtle realms.


சுட்டியும் கொடுத்தது என்னத்துக்குன்னா நீயா கற்பனை பண்ணி சொல்றே என்று சொல்வீங்க. அதுனாலத்தான். 

இதுல டாப் காமெடி என்னன்னா துர்க்காவுக்கே சரணாகதி பற்றிச் சொல்லிக் கொடுத்து சும்மா ஒரு தேவதையா இருந்த அவங்களை நல்வழிப் படுத்தினாங்கன்னு ஒரு பிட்டு வருதே...அடேடே.... 

நீங்க எதை வேணுமின்னாலும் நம்புங்கய்யா. உங்களை யாரும் கேட்க முடியாது. ஆனால் உங்களுக்குள்ள மனசாட்சி கேட்குமே அப்ப என்ன பண்றதுன்னு கொஞ்சம் யோசிங்க. என்னைக் கண்டு உறுமலாம்.வெறுக்கலாம். கிண்டல் கேலியா அள்ளி வீசலாம். ஆனால் நீங்களே உங்களுக்கு மாறாத கண்டனமா ஆகிநிற்கும் போது என்ன பண்ணுவது ஐயா? 

Man can choose to ignore his reason. But he has no choice over the consequences. 

*** 


இவங்க பாடு ஒரு பக்கம்னா, கிட்டத்தட்ட நம் காலத்து mystics பெரும்பான்மையும் ஏதாவது இந்த மாதிரி பூச்சாண்டி கதையைப் பெரிய மஹா வரபிரசாதம் மாதிரி கொடுத்துத் தங்கள் பக்தர்களைப் பேதைகளாக ஆக்கி, கேவலப் படுத்தியிருப்பதுதான் மிச்சம். 

என்ன கருத்து சொல்லியிருக்காங்கன்னு பார்த்தா சும்மா ஏற்கனவே இருக்கிற வேதாந்தம், ஆகமங்கள் இவற்றை வைத்துக் கொண்டு பொடிமாஸ் பண்ணியிருக்கும் ஜாலம்தான். வேற ஒன்றையும் காணோம். 

ஏதாவது கேட்டா, மக்களை ஈர்க்கறதுக்கு இது மாதிரி ஏதாவது பண்ணாத்தான் உண்டுன்னு ஒரு சால்ஜாப். 

ஒத்தரை கேமராவுல படம் பிடிச்சா படமே விழலைன்னு ஒரு புருடா. 

இன்னொருத்தர் பூட்டின வீட்டுக்குள்ள முன்னாடியே புகுந்து உட்கார்ந்திருத்துட்டுப் பேசிட்டுப் போனாரு. அப்பறம்தான் தோணிச்சு -- அடடா இவர் எங்க எப்படி இங்க வந்தாரு. இவர் எங்கயோ தள்ளி அந்த ஊர்ல இருக்காரு. 

இதுவாவது வந்தாரு எப்படி இருக்கேன்னு ஒத்தை கேள்வியைக் கேட்டாரு. பொனாருன்னு கதை. ஆனால் சில கதைகள் இருக்கே அடடா! ---------தான் சிரிக்கணும். 

எங்காத்துல கல்லுரல் எங்க வச்சேன்னு தெரியலை. வழிவழியா பெரியவர்கள் கொடுத்து எங்காத்துல வந்துண்ட்ருக்கு. காணாம போச்சோன்னு பதறித்து. போய் தர்சனம் பார்க்கப் போனா, எதேச்சையாத்தான் சொன்னார்....உங்காத்து பரண்ல ஒரு தேக்குப் பெட்டி அந்தக் காலத்துது இருந்துதே....இன்னும் இருக்கோன்னார்.....இருக்கேன்னு சொல்லிட்டு வந்துட்டேன்...ஆனா பாருங்கோ...அதான் மகான்கள்ங்கறது...அங்கேந்து..அவர் கண்ணுக்குத் தெரிஞ்சுருக்குப் பாருங்கோ.....ஆத்துல வந்து மொதோ காரியமா பரண்ல ஏறி தேக்குப் பொட்டியைப் பார்க்கிறேன்...உள்ள இருக்கு இந்த கல்லோரல்...அப்பவே கன்னத்துல போட்டுண்டேன்.... 

அதுவும் வங்காளிகளுக்குன்னு ஒரு தனி mystic sense உண்டு போல இருக்கு! இந்த மாதிரி சித்து விளையாட்டெல்லாம் மகா கேவலம் என்று சதா திட்டிய ஸ்ரீராமகிருஷ்ணர் வாழ்க்கையையே அவர் காலத்து வங்காளிகள் சிலர் எழுதியிருப்பதைப் பார்த்தால், ஐயய்ய்ய....மந்திரவாதி..மோடி மஸ்தான் தோத்துது. Throw these rubbish என்று விவேகாநந்தர் கத்திக் கொண்டிருந்த வரையில் அடங்கியிருந்தது. அப்புறம் யார் கேட்கிறது? நல்ல வேளை...விவேகாநந்தரின் நூல் தொகுதிகளும், சகோதரி நிவேதிதாவின் விளக்கங்கள், குறிப்புகளும் கிடைக்கின்றனவோ, விவேகாநந்தர் என்ற ஒற்றை மதச் சிந்தனையாளனின் கருத்துச் செல்வம் கோணாமல் கிடைக்கிறது. அவர் மேலும் இந்த பக்தர் கூட்டம் புனைந்து வைத்திருக்கும் ஜோடனைகளும் எக்கச்சக்கம். ஆனால் அவர் வாய்மொழி இந்தத் தில்லுமுல்லுகளை எல்லாம் தோலுரித்துத் தவிடு பொடியாக்குகிறது. அதனால் பிழைத்தது, ஏதோ சிந்தனை வல்ல மனிதர்கள் எது உண்மையான செய்தி விவேகாநந்தருடையது என்று தெரிந்து கொள்ள முடியும். 

மற்றொரு வங்காளி. பரமஹம்ஸ யோகாநந்தா. என்ன ஆள் இவரு. அதாவது என்ன வேண்டுமானாலும் மதம் என்ற போர்வையில் ரீல் சுத்தலாம். மனிதனின் அறிவுக்கு ஒரு மரியாதை. ம் ம் தொட்ட கையால் கூட கிடையாது. ஆனால் புத்தக விற்பனை பார்த்தால் அம்மாடி....அதாவது மக்கள் இவர்களைத் தேடுகிறார்கள்...இவர்கள் மக்களை நன்கு புரிந்து வைத்துள்ளனர். 

அறிவைத் துலக்கிக் காட்டுங்கள். கூட்டம் சேராது; விற்பனை ஆகாது; சொத்து சேராது. 

அறியாமையை அபிஷேகம் செய்யுங்கள். ஆஹா.....ஆயுட்கால பக்தர் கூட்டம் அடிபிடி தாங்காது. 

எதற்கு ஒரு துறவியிடம் கோடானுகோடி ரூபாய் நோட்டுகள்? எதற்கு ஏகப்பட்ட பொன் வெள்ளி சேகரிப்புகள்..அதுவும் எல்லாம் அவர் அன்றாடம் தூங்கும் அறையிலேயே? இந்தக் கேள்வி கேட்க ஓர் அறிஞனும் ஹிந்து மதத்தில் யோசிப்பதில்லை. ஆனால் இதற்கெல்லாம் சப்பைக் கட்டு கட்டுவதென்றால் ஓவர் டைம் ஒர்க் பண்ணுகிறார்கள் நம்ம அறிவு ஜீவிகள், பக்த புங்கவர்கள். 

'அவாளையெல்லாம் ஏன்னு கேள்வி கேட்க நேக்கு யோக்கியதை கிடையாது சார். அவா பாத தூளி பட்டால் போதும்.' சரி அதற்கு எதற்கு ஆயிரக் கணக்கான ரூபாய்..தங்கக் காசுகள்? அசட்டு அபிஷ்டு...இவ்வளவுதான் பதில். 

அதாவது இந்த மாதிரியான ஆள்களும், அவர்களுடைய பக்த கோடிகளும் தாங்கள் ஹிந்து மதத்தைக் கைக்கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டும் பேசிக் கொண்டும் திரிவதைப் பார்த்தால், 'ஐயோ! உண்மையான ஹிந்து மதம் என்னவாக இருக்கிறது! இந்த மாதிரியான கலியின் விடம்பனங்களாய்த் திரிகின்ற பேர்கள் அதை உணராமல் பெரும் களங்கத்தை ஏற்படுத்திய வண்ணமும் சுமந்த வண்ணமும் திரிவதோடு மட்டுமின்றி இனி வரும் தலைமுறைகளுக்கும் தீரா இடும்பை பயக்கின்றார்களே என்பதை நினைக்கும் போது மிகுந்த அயர்வு ஏற்படுகின்றது. 

இவ்வளவு அசிங்கமும் செய்துவிட்டுப் பின்னர் ஏன் 'ஐயோ எங்கள் பிள்ளைகள் நம் மதத்தைச் சிறிதும் மதிக்கின்றார்கள் இல்லை. நம் பண்பாட்டை அவர்களே கேவலமாகப் பேசுகின்றார்கள். வயித்தைப் பத்திண்டு வருது. என்ன ஆகுமோ நம் சந்ததிகளுக்கு?' 

என்ன ஆகும்? நீ விதைத்த விஷங்களைத்தானே உன் சந்ததிகள் அறுவடை பண்ணும். கர்மா என்ன மாறிவிடுமா? உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்துத் தானே ஆகவேண்டும்! 

பெரிய அறிவாளி (அரைவாளியோ அரைக்கா வாளியோ) போல் ஏதோ சமுதாய அக்கறை, லஞ்சம், ஊழல், நாட்டில் அக்கிரமம் என்று பந்தா காட்டிவிட்டு, கருத்துகள் ரீதியாக ஹிந்து மதம் என்று வரும் போது போயும் போயும் கழனிப் பானையில் கையை விட்ட கதையாக நடந்து கொண்டால் ம் அப்புறம் எப்படி பெத்த பிள்ளைகள் மதிக்கும்? 'உன் யொக்க்கியதையும் தெரியும்; உங்கப்பன் யோக்கியதையும் தெரியும்; முதல்ல நீ ஒழுங்கா வாழற வழியைப் பாரு. எனக்கு புத்தி சொல்ல வராத' என்றுதான் மகனோ மகளோ சொல்லிவிட்டுப் போவாள். 

காரணம், உலக நடவடிக்கைகளில் மிகவும் அறிவு விழிப்பாகப் பேசுகிற நாம் ஆன்மிகம், மதம் என்று வந்துவிட்டால் மிகவும் கேவலமாக, ஒரு கிராமத்தான் கூடக் கொஞ்சம் விழித்தவனாக இருப்பான், அவனிலும் மிகவும் மோசமாக, மூடநம்பிக்கைகளை உள்ளத்துக்குள்ளே வைத்துப் பூட்டிக் கொள்கிறோம். ஏய் நாறுகின்ற பிணம் அது. கருமம். நோய் வந்து சாகாதே! என்றால் நாம் ஜன்ம வைரி ஆகிவிடுவோம். 'ஏதோ இருக்கு சார்! சும்மா நம்ம அறிவுன்னு பேசிண்டு....' இந்த மொட்டைத்தனமான குருட்டு ஆத்திரம் நம்மை எங்கு கொண்டு போய் விட்டிருக்கிறது என்று என்றேனும் நமக்கு நாமே யோசித்தால் புரியாதா? 

இததனைக்கும் நம் முனிவர்கள், ஆசாரியர்கள், ரிஷிகள் நம்மை எவ்வளவோ காப்பாற்றுவதற்காக அறிவுத் தெளிவாக அருமையான ஏற்பாடு பண்ணி வேதாந்தம் என்று கையில் கொடுத்துப் போனாலும், தூய தெய்விக நீரை நம் வாழ்வுக்கு ஜீவாதாரமாகக் கொடுத்துவிட்டுப் போனாலும் தேடித்தேடி சாக்கடைகளின் நீரைக் குடித்து, கும்பங்களில் ஏந்தி பூஜை பண்ணுவேன் என்றால் அதை விடக் கேவலம் எது? முட்டாள்தனம் எது? இந்த அழகுக்கு இளைய தலைமுறை நமது பாரம்பரியத்தைத் தெரிந்துகொள்ளவில்லையே என்ற மகா கரிசனமான அங்கலாய்ப்பு வேறு. நம்மைவிடப் பொய்யான மனிதர்கள் எங்கு கிடைப்பார்கள்? 


***

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்