Saturday, January 29, 2011

’உபரி மதிப்பு’

   உபரி   மதிப்பு   என்ற   கருத்து,   கம்யூனிஸத்திலும்,  மற்ற  சித்தாந்தங்களிலும் (பொருளாதார  சித்தாந்தங்கள் :--))  )   எப்படி  அணுகப் பட்டிருக்கிறது  என்பதை  அறிய   ஒரு  நல்ல  வாய்ப்பு.    பொருளாதார   சித்தாந்தங்கள்    பல  இருக்கின்றன.    classical   school  of   economics,   keynes  theory,    austrian  school  of  economics,    chicago  school  of  economics   என்று  இன்னும்  பல.
 
கம்யூனிஸக்   கொள்கைக்கான    மூல  நூல்   தாஸ்   காபிடல்   தமிழில்    இரண்டு    மொழிபெயர்ப்புகள்  கண்டிருக்கின்றன,   திரு  தியாகுவாலும்,   திரு  ஜமதக்னியாலும்.    மேலும்  இருக்கலாம்.     திரு  சாமிநாத  சர்மா    ஒரு  நூல்  எழுதியிருந்ததாக    நினைவு.      இதைப்  போன்று     மற்ற  சித்தாந்தங்களுக்கு   உரிய  நூல்கள்    மொழிபெயர்ப்புகள்   காணவில்லை.    உதாரணமாக     கட்டற்ற     சுதந்திரமான    தனித்துவமய    பொருளாதார  இயக்கம்   என்பதைச்  சுட்டும்   laissez-faire  capitalism   என்பதற்கு    மிக  ஆழமான     விரிவான     நூல்கள்    லுட்விக்   வான்  மைஸஸ்  Ludwig  von  Mises,   எப்  ஏ  ஹயக்   F A  Hayek,   போன்றவர்களால்    எழுதப்பட்டிருக்கின்றன.   ஆனால்    அவையெல்லாம்     ஆங்கிலத்தில்    மொழிபெயர்ப்பும்,  மூலமுமாக  இருக்கின்றனவேயன்றி      தமிழில்  அறிந்துகொள்ளக்   கிடைப்பதில்லை.  
 
முக்கியமாக     வான்  மைஸஸ்    அவர்களது    நூலான     Human  Action   என்ற     நூல்    மிக  முக்கியமான    நூலாகும்.    பொருளாதார    இயக்கத்தைத்   தனிப்பட    ஒரு  துண்டுபட்ட   துறையாகக்  காணாமல்     மனித     யத்தனம்    என்ற   ஒட்டுமொத்தத்  துறையின்     ஓர்  அங்கமாகக்    காட்டுகின்றார்   வான்  மைஸஸ்.    மனித  யத்தனம்   என்பதை     Praxeology  என்ற    துறையாக   அணுகுகிறார்.   எப்படி    மனித  முயற்சிகள்  அனைத்திற்கும்  பொது   தத்வார்த்த    அடிப்படைகள்  அமைந்திருக்கின்றன,    அவை  என்ன,   அதே   தத்வார்த்த  அடிப்படைகள்  எப்படி    Praxeology  இன்    அங்கமான    பொருளாதாரத்திலும்    உள்  அமைந்து    செயல்படுகின்றன,   உள்ளார்ந்த    இந்த  தத்துவார்த்த  இயல்பிற்கு    விரோதமாக    பொருளாதாரம்   இயங்கத்  தொடங்கும்  போது   எப்படி   குளறுபடியாகிறது    என்பதையெல்லாம்     அந்த  நூலில்    விரிவாகக்   கூறுகிறார்.  
 
அவரே     சோஷலிஸம்    என்பதைப்  பற்றிய    விமரிசன  நூலொன்றையும்   எழுதியிருக்கின்றார்.       Theory  of  Money  and  Credit,   Epistemological  foundations  of  Econiomics  போன்று  பல  நூல்கள்.     கோட்பாடும்,  சரித்திரமும்    என்பதைப்பற்றி    Theory  and  History     என்ற  நூல்   முக்கியமானது.   நல்ல  வேளையாக    அவரது  நூல்களையெல்லாம்     அனைவருக்குமாக   இணையத்தில்  ஏற்றிவைத்திருக்கிறார்கள்.  
 
இதனோடு   கூட    தமிழ்  மரபில்    எப்படி   பொருளாதாரச்  சிந்தனைகள்   அமைந்திருக்கின்றன    என்று   இலக்கியத்தையே  ஒரு  பொருளாதாரப்  பார்வை  பார்ப்பதற்கும்    வசதியாக  இருக்கும்   இந்த  இழை.    'வரப்புயர'    என்ற   ஒற்றைச்  சொல்லில்    micro,  macro  economics,    agriculture   vs  manufactural  economics,   domestic  vs  political  economics  என்றபடி   அனைத்தையும்    குறிப்பு  காட்டிவிட  முடிகிறது    ஔவைப்  பாட்டியால்   என்றால்,    தமிழ்க்  கன்னியின்    கடைக்கண்  குறிப்பில்   எத்தனை  எத்தனை  அர்த்தங்களோ!
 

ஒரு  சந்தேகம்.    இந்த   உபரி  மதிப்பு   என்பதில்    மதிப்பு   பின்  அதற்கு  மேல்   உபரியான  அம்சம்   என்று   பொருள்  வருகிறது.     அப்பொழுது    உழைப்புக்கு  உரிய  மதிப்பு   வந்துவிடுகிறது.  அதற்கு மேல்   உபரியான   அம்சம்   என்னாகிறது  என்றுதான்   பேச்சு.    அது  யாருடையது?    உழைத்தவருடையதா?   உழைப்புக்கான    முதல்  போட்டவருடையதா?     உழைக்க  வரும்  முன்னரே     இந்த  உழைப்புக்கு   இந்த   மதிப்பு  என்று    தீர்வாகி    முடிந்து  போகிறது.   பின்    தொடர்ந்து  அந்த   உழைப்பு    ஈட்டிக்கொடுக்கும்    பல்ன்    உபரி  என்றால்   அதில்    உழைத்து   அதற்குரிய  மதிப்பைப்  பெற்றுச்  சென்று  விட்டவருக்கு    அதில்   எந்த    உரிமையோ  பங்கோ  இல்லையா?     முதல்  போட்டவருக்குத்தான்     தொடர்ந்த    பயன்களால்     லாபம்  என்பதா?
 
இது  இப்படி  என்றால்    இந்தியாவில்    ஒரு  மணி  நேரம்   ஒருவர்   உழைக்கிறார்.   அதற்கு    ஒரு  மதிப்பு  நிர்ணயமாகிறது.     அதே  நேரம்  அதே  உழைப்பு   அவர்    வேறு  ஒரு  நாட்டில்    செய்தால்     பலமடங்கு    மதிப்பு    பெற முடிகிறது.    அப்பொழுது     உழைப்புக்கான  உரிய  மதிப்பை    முடிவு  செய்வது   எது?     சந்தையின்    தேவை   என்பதுதானே      அனைத்து  மதிப்புகளையும்   நிணயிக்கும்     மூலம்.     சந்தையின்   தேவை    நிர்ணயித்துத்    தரும்    மதிப்பு    உழைப்புக்கு  வந்தடையாமல்    போக   இடைப்பட்ட    தடங்கல்கள்    ஏற்படலாம்.  அப்பொழுது    அந்தத்   தடங்கல்களை     சமாளித்து    உரிய  மதிப்பைப்  பெற்றுத்தரவும்,    எதிர்காலத்தில்   தடங்கல்கள்   ஏற்படாதவாறு   பார்த்துக்கொள்ளவும்     உழைப்பவரின்  ஒருங்கிணைந்த    அமைப்பு     அவசியம்  இல்லையா?        

 
ஒரு   தொழில்  ஏற்படும்   முன்    முந்தைய    பொதுவான  சூழ்நிலையில்   பலர்  இருக்கின்றார்கள்  என்று  வைத்துக்கொண்டால்,   யாரோ  ஒருவர்    அந்தச்  சூழ்நிலையில்    இருக்கும்  சாத்தியங்களைக்  கண்டறிந்து,  அவற்றை  வளமாக   ஆக்க    வழிகளையும்    தேர்ந்து,   அதற்கு   பெருவாரியான  உழைப்பு    தேவை  என்னும்  போது, யந்திரங்களையோ  மனிதர்களையோ    அன்றேல்  இரண்டும்  கலந்தோ    உள்ளே சேர்த்துக்  கொள்ள     தேர்வழைப்பு  விடுக்கிறார்.
 
உள்ளே   சென்ற   உழைப்பாளிகள்    தங்கள்    உழைப்பைக்  கேட்கும்  விதத்தில்  தருகிறார்கள்.    அதற்கான      சார்பு  மதிப்பு    ஊதியமாகத்  தரப்படுகின்றது.      அதே   உழைப்பாளிகள்      அந்த  உழைப்பில்   அவர்கள்    செய்யும்     அதே  உழைப்பின்    அத்தனை  சடங்குகளையும்   ஒன்றுவிடாமல்      வெளியே  இருந்துகொண்டு     செய்தார்களானால்     அதற்கு   எந்த  மதிப்பும்  இல்லை.   வெறும்  பிரயாசையே  மிஞ்சும்.   உண்மை.     அப்பொழுது    அந்த    உழைப்பு    அது    இயற்றப்படும்    எதிர்பார்ப்பு--திட்டச்  சூழ்நிலைகளால்     ஒரு  மதிப்பைப்  பெறுகின்றது.    அதாவது    உழைப்புக்கு  என்று    Innate   Value    என்பது  இல்லை.   சரி.
 
ஆனால்     ஒரு   தொழிலைத்  திட்டமிட்டுத்  தொடங்கிய     தொழிலறிவாளர்,    இந்த  உழைப்புகள்  ஏதும்    கிடைக்காத   நிலையில்    தம்முடைய    தொழிலறிவு,    முதல்  இவைகளை  மட்டும் கொண்டு     அந்த  வளத்தை உருவாக்கம்     செய்துவிட  முடியுமா?   அப்பொழுது     தொழிலறிவும்   உழைப்பை  நம்பித்தானே    இருக்கிறது.   என்ன.....ஏகப்பட்ட     உழைப்பாளிகள்     கிடைக்கும்     சூழ்நிலையில்       இது    ஒருவித,     உழைப்பை   நம்பியிராத    சுதந்திரப்  போக்கு   கொண்டதுபோல்     ஒரு  தோற்றம்   தருகிறது.   சரி  இருக்கட்டும்.      தொழில்  ஆரம்பித்து    நினைத்த   வளத்தை ஈட்டி    அனுபவிக்கும்   நிலையில்     அந்த  வளத்திற்கான    காரணப்  பங்குகள்     எது  எது   என்று  கணக்கெடுக்கும்போது       தம்முடைய      தொழிலறிவும்,     முதலும்        காரணப்பங்காய்    இருப்பது   போன்று,    உழைப்பும்  அதில்    காரணப்பங்குதான்,    அதன்   விகிதம்     குறைவாக    இருந்தாலும்  கூட   என்றுதானே    முடிவுக்கு  வர  வேண்டிவரும்.   சரி  அதற்குத்தானே    ஊதியம்  பேசி  கொடுத்தாய்விட்டது.   அப்புறம்    எதற்கு  அதைக்  கணக்கில்  எடுப்பது    என்று  விடலாம்    என்று  சொல்வோம்.     கிடைத்த    வளத்தில்    உழைப்புக்கான    பங்கு  ஊதியமாகக்  கொடுத்தாகி  விட்டது.   மிஞ்சினது    அனைத்தும்    நம் போகத்திற்கு.      சமன்பாடு  இதோடு  முடிந்தது. 
 
அந்த    வளம்   அதோடு  நின்றால்     இது  சரி.  ஆனால்  அந்த    வளம்  அதற்கு  மேல் வளத்தை    ஈட்டிக்கொண்டே    போகும்போது      அங்கு  புது    உழைப்போ   அல்லது  புது  தொழிலறிவோ    உள்ளே   போடப்படுவதில்லை.    created  wealth  begins  to  have  a  life  of  its   own.    அப்பொழுது   மேலே  மேலே    அடையப்படும்     உபரிவளம்     காரணப்பங்கு  விகிதம்    என்பதை  வைத்துப்  பார்க்கும்  போது     தொழிலறிவு--முதல்    என்ற     காரணிக்கு  மட்டுமே    சென்று    சேர்வதையும்,     உழைப்பு  என்ற  காரணிக்கு     எந்த    சம்பந்தமும்    இல்லாது  போன்றும்   ஆக்கப்படுகிறது. 
 
எந்த  வளத்திற்கு     இந்த  உழைப்பு  என்ற   காரணம் இல்லையோ    அங்கு     இதற்கான     பயன்  விகிதம்     இல்லை.    ஆனால்    ஒரு  வளம்     இந்த  உழைப்பாலும்     சேர்ந்து   உருவானது   என்னும்  போது     அந்த   வளம்    ஈட்டும்    மேலதிக   உபரிவளத்தில்      இந்த  முதல் உழைப்புக்கு    எந்தப்  பங்கும்  கிடையாது    என்று  சொல்லமுடியுமா?      அதான்  ஊதியம்  தந்தாயிற்றே    என்று  சொல்லும் வாதம்     தொழிலறிவுக்கும்    பொருந்தும்தானே.     தொழிலறிவு--முதல்    இவற்றுக்கான     முதல் வளப்பங்கும்  முடிந்துவிட்டதே.     எந்த   வளத்தில்    உழைப்பும்,   தொழிலறிவு/முதல்   எனபதும்   காரணப்பங்குகளாய்    இருந்தனவோ     அந்த   வளம் ஈட்டும்  உபரிவளத்தில்     ஒரு  காரணப்பங்குக்குத்தான்    சம்பந்தம்  உண்டு   மற்ற     காரணப்பங்குக்கு     அது  எவ்வளவுதான்    அறிவை  நோக்க    தாழ்ந்தது  எனிலும்,   சம்பந்தமே  இலலை   என்று   சொல்வது   தொழில்   சூழ்நிலையில்    தந்திரசாலித்தனமாக  இருக்கலாமே  அன்றி,   தார்மீகம்    ஆனதா?  

 

அறிவுக்கான  பங்கு    அதிகம்   இருக்கட்டும்.       உழைப்புக்கான பங்கு  குறைவு  என்று  இருக்கட்டும்.   ஆனால்     உபரிவளத்தில்    உழைப்புக்கு  ஒரு  உரிமை இருக்கிறதா   இல்லையா    என்று    பார்த்தால்   இல்லை என்று  சொல்லிவிட முடிவதில்லை.   உழைப்பு   தாராளமாகக் கிடைக்கிறது    எனவே    அதன் உரிமைகள்    மீச்சிறு  பங்கு    மட்டுமல்ல,     கவனிக்கத்தக்கதும் அல்ல.  நிராகரிக்கலாம்.  கண்டுகொள்ளாமல்  இருந்துவிடலாம்  என்பது   சந்தர்ப்ப  வாதமாக
அமைந்து விடாதா?     'போர்க்களத்தில்  என்ன   ஒப்பாரி   வேண்டிக் கிடக்கிறது?'    என்பது போல    சந்தை   ஓட்டத்தில்    சூழ்ச்சியும்,    சுதாரிப்பும்தான்  வெல்லுமே  அன்றி    அறக்கவலைகள் எல்லாம்    என்ன  மதிப்புடையன   என்று  நினைக்கலாம்.  
அப்பொழுது    பொருளாதாரத்தில்   லாபம் மட்டுமே   அறம்.   மற்றபடி     அறக்கோட்பாடுகள்  என்பதற்கு    இடமில்லை     என்று    ஆகுமா?    இது  ஒரு  பக்கம்.   ஆனால்    நான்    வேறு  ஒரு  கோணத்தில்    உங்கள்  பதில்    வாதத்தை  எதிர்பார்த்தேன்.  
 
என்னவென்றால்,     சரி,    உபரிவளத்தில்    உழைப்புக்கு    பங்கு  உண்டு  என்னும் பட்சத்தில்,     தொடர்ந்து   உபரிவளம்    ஏற்படாமல்    எதிர்பாராத   வளத்தின் கேடு     சம்பவித்தால்     அப்பொழுது  நிலைமை  என்ன?    உபரிவளத்தில்   உரிமை  கோரிய உழைப்பு     அந்த    நஷ்டத்திலும்    பங்கெடுக்குமா?  அன்றேல்     அது  முழுக்க   தொழிலறிவு/முதல்    என்பதைச்  சார்ந்தது    தனக்கு  எவ்விதத்திலும்    சம்பந்தம்  இல்லை என்று   ஒதுங்கிவிடுமா?     ஒதுங்கிவிடுகிறது  என்பதுதான்    யதார்த்தம்.    எனவேதான்      உபரிவளத்தில்  கறாராகத்   தன் பங்கைக் கோராமல்  ஏதோ   லாபத்தில்    ஓர்  ஊக்கத்தொகை    என்பதுபோல்     அமைதியடைகிறது.    



முதல்   ஈட்டும்   மேலதிக   வளம்   என்று   சொன்னோம்.    ஒரு  விதத்தில்  சரி  என்று  தோன்றுகிறது.    ஆனால்    முழு  உண்மையா    என்று ஐயமும்    வருகிறது.   ஏனெனில்    வியாபாரத்தில்,   தொழிலில்,   முதலின்   பெருக்கம்  தன்னைப்போல்  லாபத்தை    ஈட்டிவிடுகிறதா?     லாபம் என்பதே    முதலைச்   சார்ந்து மட்டுமா   இருக்கிறது?   தொழில்  முனைவோர்     முதலையும்,   வாய்ப்பான    இடத்தையும்,    உற்பத்திக்  காரணிகளையும்,  உழைப்பையும்     குவித்து  ஒரு  இடத்தில்  வைத்துக்கொண்டு  விட்டால்    அது  உடனே  லாபத்தில்  போய்  முடிந்துவிடும்  என்று  சொல்ல முடியுமா?     பயன்படுத்துவோரின்   தேவைகள்    என்று  ஒன்று    கோலோச்சுகிறதே.   அதற்குக்   கீழ்ப்படிந்துதானே     அனைத்தும்     இயங்கமுடியும்.    தொழிலுக்கான    அத்தனை   ஸங்காதங்களும்    சேர்ந்துவிட்டால்   அங்கு    லாபத்தின்    பிரஸன்னம்    தோன்றிவிடுமா  என்ன?     (இங்கு    சம்பந்தமில்லாமல்     ஒரு   ஒப்புமைக் கருத்து     தோன்றுகிறது.      அதிகமாகத்  தத்துவம்  படித்தால்   இப்படித்தான்  போலும்.   --   ரூப,  வேதனா,    ஸாம்ஜ்ஞ,  ஸம்ஸ்கார,  விஜ்ஞான   ஸ்கந்தங்கள்    ஒன்று  சேர்ந்து     அந்தக்  கூட்டரவில்     ஆத்மா   என்று  தோற்றம்   ஏற்படும்     என்ற    புத்த  உபதேசத்தின்   பிரதிபலிப்பா  லாபம்?)    
தொழில்  முனைவோரின்    பங்கு  பௌதிகமாய்   இல்லாவிட்டாலும்     எதிர்காலத்தின்    நிச்சயமற்ற   தன்மையை     மூடு   மறைவு   பாதுகாப்பு   ஒன்றுமின்றி      எதிர்கொள்ளும்     பெரும்பங்கு    அவர்களுடையது  அன்றோ?    
லுட்விக்    வான்  மைஸஸின்      Human  Action  ல்    வரும்   பகுதி  நம்மைச்  சிந்திக்க  வைக்கிறது.   சற்றே   நீளமானது  எனினும்     முக்கியமானது  என்பதால்    தருகிறேன்.     அலுப்படையச்  செய்தால்    மன்னிக்கவும்.  
 
 
 

Many people are utterly unfit to deal with the phenomenon of entrepreneurial profit without indulging in envious resentment. In their eyes the source of profit is exploitation of the wage earners and the consumers, i.e., an unfair reduction in wage rates and a no less unfair increase in the prices of the products. By rights there should not be any profits at all.

Economics is indifferent with regard to such arbitrary value judgments. It is not interested in the problem of whether profits are to be approved or condemned from the point of view of an alleged natural law and of an alleged eternal and immutable code of morality about which personal intuition or divine revelation are supposed to convey precise information. Economics merely establishes the fact that entrepreneurial profits and losses are essential phenomena of the market economy. There cannot be a market economy without them. It is certainly possible for the police to confiscate all profits. But such a policy would by necessity convert the market economy into a senseless chaos. Man has, there is no doubt, the power to destroy many things, and he has made in the course of history ample use of this faculty. He could destroy the market economy too.

If those self-styled moralists were not blinded by their envy, they would not deal with profit without dealing simultaneously with its corollary, loss. They would not pass over in silence the fact that the preliminary conditions of economic improvement are an achievement of those whose saving accumulates the additional capital goods and of the inventors, and that the utilization of these conditions for the realization of economic improvement is effected by the entrepreneurs. The rest of the people do not contribute to progress, but they are benefited by the horn of plenty which other people's activities pour upon them.

What has been said about the progressing economy is mutatis mutandis to be applied to the conditions of a retrogressing economy, i.e., an economy in which the per capita quota of capital invested is decreasing. In such an economy there is an excess in the total sum of entrepreneurial losses over that of profits. People who cannot free themselves from the fallacy of thinking in concepts of collectives and whole groups might raise the question of how in such a retrogressing economy there could be any entrepreneurial activity at all. Why should anybody embark upon an enterprise if he knows in advance that mathematically his chances of earning profits are smaller than those of suffering losses? However, this mode of posing the problem is fallacious. Like everyone else, entrepreneurs do not act as members of a class, but as individuals. No entrepreneur bothers a whit about the fate of the totality of the entrepreneurs. It is irrelevant to the individual entrepreneur what happens to other people whom theories, according to a certain characteristic, assign to the same class they assign him. In the living, perpetually changing market society there are always profits to be earned by efficient entrepreneurs. The fact that in a retrogressing economy the total amount of losses exceeds the total amount of profits does not deter a man who has confidence in his own superior efficiency. A prospective entrepreneur does not consult the calculus of probability which is of no avail in the field of understanding. He trusts his own ability to understand future market conditions better than his less gifted fellow men.

The entrepreneurial function, the striving of entrepreneurs after profits, is the driving power in the market economy. Profit and loss are the devices by means of which the consumers exercise their supremacy on the market. The behavior of the consumers makes profits and losses appear and thereby shifts ownership of the means of production from the hands of the less efficient into those of the more efficient. It makes a man the more influential in the direction of business activities the better he succeeds in serving the consumers. In the absence of profit and loss the entrepreneurs would not know what the most urgent needs of the consumers are. If some entrepreneurs were to guess it, they would lack the means to adjust production accordingly.

Profit-seeking business is subject to the sovereignty of the consumers, while nonprofit institutions are sovereign unto themselves and not responsible to the public. Production for profit is necessarily production for use, as profits can only be earned by providing the consumers with those things they most urgently want to use.

முழுப்பகுதியையும்     படிக்க     மேற்கோள்   சுட்டி    இஃது:-

http://oll.libertyfund.org/title/308/34651/868277      வான்  மைஸஸின்     நூல்  முழுமையையும்     வலையேற்றி    வைத்திருக்கிறார்கள். 

          
முதல்  ஈட்டும்   மேலதிக  வளத்தில்    உழைப்பாளருக்கு    உரிய  பங்கில்    ஒரு  நியாயம்  இருக்கிறது  என்று    நாம்  கூறிக்கொண்டிருந்தது    அவ்வளவு  நியாயமானதுதானா  என்பதைச்  சிந்திக்க  வைக்கிறது     மேற்கோள்  காட்டிய   பகுதியில்    முதல்   ஓரிரு   பத்திகளில்   வான்  மைஸஸ்   தரும்  எண்ணங்கள்.  
 
" தொழில்   முனைவோரின்  லாபங்களைப்   பற்றிப்  பேசுவதில்   பலரும்   பொறாமை  உணர்ச்சியையே  காட்டுகின்றனர்.    அவர்களின்   எண்ணத்தில்   தொழில்  முனைவோரின்  லாபம்  என்பது    ஏதோ   தொழிலாளிகளின்   சம்பளத்தில்  அடித்தும்,   பயனுறுவோர்களை  ஏமாற்றி  அதிக  விலை  வைத்தும்   பொருட்களை   உற்பத்தி  செய்தும்,  விற்றும்   ஈட்டப்படுவதுதான்  லாபம்   என்று  இருக்கிறது.

பொருளாதாரத்திற்கு   இத்தகைய  தாந்தோன்றித்தனமான   அபிப்ராயங்களைப்  பற்றிச்  சிறிதும்  கவலையில்லை.   அது   இயற்கை  விதி  என்று  சொல்லிகொண்டு  வந்தாலும்  சரி  அல்லது   அருள்  நிலை,  தெய்வக்  காட்சி  என்று  சொல்லிகொண்டு  வந்தாலும்  சரி.   பொருளாதாரம்    சொல்வது  எல்லாம்   சந்தைப்  பொருளாதாரத்தின்   இன்றியமையா   நிகழ்வுகள்   லாபமும்  நஷ்டமும்.   இவையின்றி   சந்தைப்  பொருளாதாரம்  இருக்க முடியாது.   போலீஸை  வைத்து   அத்தனை  லாபத்தையும்  பிடுங்கிவிட  முடியும்.   ஆனால்  அத்தகைய   கொள்கை   சந்தைப்  பொருளாதாரத்தை   அர்த்தமற்ற  குழப்பமாக  ஆக்கிவிடும்.   பலவற்றையும்  அழிப்பதற்கான  ஆற்றல்  மனிதனிடம்   இருக்கவே இருக்கிறது.  வரலாற்றில்   நெடுக  பார்த்தால்   இந்த   அழிக்கும்  ஆற்றலையே   பெருமளவு  அவன்  பயன்  படுத்தியிருக்கிறான்.  சந்தைப்  பொருளாதாரத்தையும்  அவன்  அழிக்க  முடியும்.

தங்களைத்  தாங்களே   பெரும்   அறவழி   அக்கறை  வாதிகள்  போல்   காட்டிக்கொள்வோர்   லாபத்தால்   கண்கள்  மறைக்கப்  படுகின்றனர்.  இல்லையேல்   அவர்கள்   லாபத்தைப்  பற்றிப்  பேசும்  போது  சௌகரியமாக   நஷ்டத்தைப்  பற்றி   கவனியாதது  போல்   விட்டுவிட  மாட்டார்கள்.   பொருளாதார   முன்னேற்றத்தின்  பூர்வாங்கங்களே   சேமித்து வைப்போரின்   சேமிப்பு  முதலாக  ஆவதும்,   புதியன  கண்டு  பிடிப்பவரின்   கண்டு  பிடுப்புகளும்,  இவற்றைக்  கொண்டு,  சூழ்நிலையை  சரிவர  கணித்து   தொழிலில்  துணிவோர்களான   தொழில் முனைவோர்களின்  முயற்சியும்   ஆகும்  என்பதை   அறவழி  வாதிகள்   மௌனமாக   காணாததுபோல்  கடந்துசெல்ல  வேறு  காரணம்  இல்லை.   முன்னேற்றத்திற்கு    மற்றவர் பங்களிப்பதில்லை.    இந்தப்  பூர்வாங்கங்களான   காரணங்களால்     ஏற்படும்  வளத்தின்    அட்சய   பெருக்கத்தில்   பங்கெடுப்பவரே    மற்றவர் எல்லாம்." 

(ஒத்தி  எடுத்தாற்போல்   மொழிபெயர்க்காமல்    பொருளோட்டத்தை மட்டும்   மொழிபெயர்த்துள்ளேன்) 

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

***