Wednesday, October 28, 2026

ஸ்ரீ ஹயக்ரீவர் ஸ்தோத்திரம் - 10

அக்3நௌ ஸமித்3தா4ர்ச்சிஷி ஸப்த தந்தோ:

ஆதஸ்தி2வாந் மந்த்ரமயம் சரீரம் |

அக2ண்ட3 ஸாரைர் ஹவிஷாம் ப்ரதா3நை:

ஆப்யாயநம் வ்யோம் ஸதா3ம் வித4த்ஸே ||

 

ஸமித்திட்டு வளர்கின்ற ஸப்ததந்தி அக்கினியாய்ச்

சபிக்கின்ற மந்திரமே சமைந்துருவாய் ஆகிநிற்பாய்

சொரிகின்ற அவிசுகளின் சாரத்தின் பிரதானத்தைச்

சுவைத்துநீ ஏற்றதனை விண்ணவர்க்கே விதந்தருள்வாய்! 

(யக்ஞத்தில் அக்கினியின் உருவாய் அவிசு ஏற்பதும், கோவிலில் அர்ச்சையின் வடிவில் பிரசாதத்தை ஏற்பதும் ஒப்பு நோக்கத் தக்கது. அர்ச்சை என்பதற்கே விக்கிரகம், ஒளி என்று இருபொருளும் உண்டு. ‘பின்னானார் வணங்கும் சோதி’ என்றே ஆழ்வார் கோவிலில் மூர்த்தியை விளிக்கின்றார்)

 

अग्नौ समिद्धार्चिषि सप्ततन्तो: आतस्थिवान् मन्त्रमयं शरीरम् ।

अखण्डसारै: हविषां प्रदानै: आप्यायनं व्योमसदां विधत्से ॥


ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

*** 

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home