Tuesday, October 20, 2026

ஸ்ரீ ஹயக்ரீவர் ஸ்தோத்திரம் - 03

ஸமாஹார: ஸாம்நாம் ப்ரதிபத3ம் ருசாம் தா4ம யஜுஷாம்
லய: ப்ரத்யூஹாநாம் லஹரிவிததிர் போ3த4ஜலதே4: |
கதா2 த3ர்ப க்ஷுப்4யத் கத2க குல கோலாஹல ப4வம்
ஹரத்வந்தர் த்4வாந்தம் ஹயவத3ந ஹேஷாஹலஹல: || 


சாமகான இசைதொக்கப் பெருநிறைவாய் 
ரிக்வேதச் சொல்லாழ்ந்த உட்பொருளாய் 
யஜுர்வேதப் பெருநிலையாய்த் 
தடையடங்கித் தாம்மறையக் காரணமாய்ப்  
போதமாம் கடலெழுந்த தொடரலைகள் தாமாய்ப் 
பரிமுகரின் ஹலஹலஹல் கனைப்பொலியோ, 
வாதச்செருக்கெழுந்து கலக்கவரும் 
வாதியரின் ஓசையினால் தானெழுந்த 
உள்ளத்துக் காரிருளை நீக்குகவே. 
 

समाहारः साम्नां प्रतिपदमृचां धाम यजुषां 

लयः प्रत्यूहानां लहरिविततिर्बोधजलधेः ।

कथादर्पक्षुभ्यत्कथककुलकोलाहलभवं

हरत्वन्तर्ध्वान्तं हयवदनहेषाहलहलः ॥


ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

*** 

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home